”என்ன உண்மை”
”நீ என்னிக்கு என்கிட்ட பொண்டாட்டியா நடந்திருக்க“
”பொண்டாட்டின்னா என்ன அர்த்தத்தில சொல்ற”
”உன்னை தொடகூட விடமாட்டேங்கறியே அப்புறம் எதுக்காக என் மேல உரிமை பாராட்டற நான் எப்படி போனா உனக்கென்ன வந்தது”
”ஓஹோ இதான் உன் பிரச்சனையா”
”ஆமாம்” என சொல்ல உடனே அவள் அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு தன் படுக்கையறைக்குச் சென்று அவனை படுக்கையில் அமர வைத்துவிட்டு அறைக்கதவை தாப்பாள் போட்டுவிட்டு அவன் முன் வந்து நின்று தனது முந்தானையை விலக்கி காட்ட அதைக்கண்டு பதறி சட்டென முகத்தை திருப்பி எழுந்து ஓரமாக நின்றான் கொம்பன்
”அறிவிருக்காடி உனக்கு இப்படியா துணியை விலக்குவ மூடு முதல்ல” என சொல்ல அவளோ
”நீ ஆசைப்பட்டது இதானே, அப்புறம் என்ன வா வந்து என்னை எடுத்துக்க வா ஆனா ஒண்ணு இதுல எனக்கு சுத்தமா விருப்பம் இல்லைதான், ஏதோ நீ ஆசைப்பட்டதுக்காக ஒத்துக்கறேன், வந்து உன் ஆசையை தீர்த்துக்க வா”
”இல்லை நான் வரலை நான் போறேன்” என அவன் பதட்டமாக வெளியே செல்ல கிளம்ப அவளோ விடாமல் அவனை பிடித்து கட்டியணைக்க இம்முறை அவனுக்கு அந்த அணைப்பு பிடிக்கவில்லை, ஏதோ தீயை தொட்டது போல துடித்து விலகி நின்றான்
”ஏன் விலகி போற”
”எனக்கு இது பிடிக்கலை”