”அப்புறம் ஏன் உன் பேரை வைச்சி யாரும் கூப்பிடறதில்லை”
”அதுவா அது ஒரு கதை”
”என்ன கதை”
”எங்கப்பா ஒரு சிவபக்தர் நான் பிறக்கவும் எனக்கு ஈஸ்வரன்னு பேர் வைச்சாங்க சாமி பேரை வைச்சி கூப்பிட கொம்பனுக்கு கஷ்டமாயிருந்தது, ஏன்னா அவனும் சிவபக்தனாச்சே அதனால பள்ளிக்கூடம் படிக்கறப்ப இருந்தே என் பேரை அவன் கூப்பிடறதில்லை அவனை பார்த்து பார்த்து யாரும் கூப்பிடறதில்லை, கணக்குபிள்ளைங்கற பேரே நிலைச்சிப் போச்சி”
”அதுசரி கணக்குபிள்ளைங்கற பேர் ஏன் வந்தது உங்கப்பா கணக்குபிள்ளையா இருந்தாரா”
”பின்ன எங்க குடும்பமே கொம்பன் குடும்பத்துக்கு விசுவாசமா இருந்தவங்களாச்சே நாங்க பரம்பரை பரம்பரையா கணக்கு பிள்ளையாவே இருந்தோம், எனக்கு கணக்குன்னா உசுரு பள்ளிக்கூடத்திலேயே நான்தான் கணக்குல புலி தெரியுமா“
”அப்போ கொம்பன்”
”அவரு சிங்கம்ல”
”புரியலை”
”பின்ன நான் புலின்னா கொம்பன் சிங்கம்தானே அவனும் கணக்குல கெட்டிக்காரன்”
”அப்படியா”
”ஆமாம்”