(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”இதைதானே நானும் முதல்ல இருந்து சொன்னேன், அப்போ உனக்கு என்னோட மனசு புரியலை இப்ப புரியுதா”

  

”என்னை மன்னிச்சிடு நான் இந்த கோணத்தில யோசிக்கலை நீ செய்றதெல்லாம் என்னை பழிவாங்கதான்னு நினைச்சேன்”

  

”உண்மைதான் நான் உன்னை பழிவாங்கனும்னுதான் கல்யாணம் செய்துக்கிட்டேன் ஆனாலும் நானும் ஒரு பொண்ணுதானே, எனக்கும் விருப்பு வெறுப்பு இருக்கும்ல உன்னால என் வாழ்க்கை நாசமானதை மறந்துட்டு எப்படி உன்னோட நான் உறவாடுவேன்னு நீ நினைச்ச”

  

”இல்லை கல்யாணம் ஆயிடுச்சி இதுக்கு அப்புறம் என்ன சேர்ந்து வாழ வேண்டியதுதானேன்னு யோசிச்சேன், ஆனா உன்னோட விருப்பத்தை மதிக்காம போனது என்னோட தப்புதான்”

  

”ஆம்பளைங்க நீங்க என்னவேணும்னாலும் பேசுவீங்க, செய்வீங்க தப்பு கிடையாது, ஒரு மன்னிப்பு கேட்டு முடிச்சிட்டுப் போயிடுவீங்க, ஆனா பொம்பளைங்க உங்களுக்கு கீழே அடங்கியே இருக்கனும், சுயமா எதுவும் பேசிட கூடாது, சுதந்திரமா எதுவும் செய்துடக்கூடாது, உன்னால என் வாழ்க்கை நாசமானதுக்காக உன்னை பழிவாங்க கூடாது

  

வேற என்ன செய்யனும் எனக்கு நடந்த அவமானத்தை மறந்துட்டு உன்னோட கூடிகுலாவி இருக்கனுமா, அப்படியிருந்தா நான் ஒரு பொண்ணே கிடையாது, என்னை அப்படி என் அப்பா அம்மா வளர்க்கலை, நீ எப்படி ரோஷமா இருக்கியோ அதே போலதான் எனக்கும் ரோஷம் இருக்கு, தன்மானம் இருக்கு, என்னோட தன்மானத்தை சீண்டி பார்க்காத பார்த்த வாழற ஆசையையே விட்டுடுவ, என்கிட்ட எச்சரிக்கையா இரு” என்றாள் கோபமுடன் அதில் அவனும் சரியென தலையாட்டினான்

  

அதன்பின் அவள் தனது துணியை சரிசெய்துக் கொண்டு கதவை திறந்துக் கொண்டு வெளியே வர அங்கு சண்முகமும் கணக்குபிள்ளையும் பதட்டமாக இருந்தார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.