வேண்டியதை சொல்லிட்டு இந்த வேலையை விட்டுட்டு கிளம்பறேன் சார்” என சொல்ல ஹெச் எம்மோ
”நீ போறதாயிருந்தா நானே எல்லா ஏற்பாடுகளையும் செய்றேன்” என சொல்லிவிட்டு அவரே பிரேயர் பெல் அடித்து பள்ளியில் இருந்த அனைத்து மாணவ மாணவர்களை மைதானத்தில் ஒன்று திரட்டினார்.
கண்ணகியோ மேடையில் நின்றபடியே அனைத்து மாணவர்களையும் பார்த்து பேசத்தொடங்கினாள்.
”எல்லா மாணவர்களையும் இந்த இடத்தில இந்நேரத்தில ஒன்று கூட்டினதுக்கு முக்கியமான காரணம் இருக்கு, படிப்போடு சேர்த்து ஒழுக்கத்தையும் நீங்க எல்லாரும் கத்துக்கனும், ஒழுக்கம்னா திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது கூடவே இன்னும் சில விசயங்களையும் நீங்க தெரிஞ்சிக்கனும், கல்வி படிக்க வேண்டிய வயசுல இருக்கற நீங்க கல்வியை தவிர வேற எதையும் படிக்க கூடாது, அதுலயும் தப்புன்னு சொல்ற கலவி பாடங்களை நீங்க ஒரு போதும் தெரிஞ்சிக்கவே கூடாது
அதுக்கான வயசும் பக்குவமும் உங்களுக்கு இல்லை, தப்பான விசயம் என்னிக்குமே தப்புதான் அதை சரியாக்க முடியாது சரியாக்கவும் வேணாம், உங்களோட அப்பா அம்மா செய்ற விசயங்கள்ல தப்பானதும் இருக்கலாம் சரியானதும் இருக்கலாம் சரியான விசயங்களை பின்பற்றுங்க, தவறான விசயங்கள தப்புன்னு உங்க அப்பா அம்மாகிட்ட எடுத்து சொல்றதோட அதை நீங்க செய்யாமலும் இருக்கனும், ஒருவேளை உங்களுக்கு தெரிஞ்சவங்க அக்கம் பக்கம் இருக்கறவங்க இந்த தப்பை செய்தாங்கன்னா அவங்களையும் கண்டிக்கலாம், ஒழுக்கம்ங்கறது பள்ளிக்கு மட்டுமில்லை வாழற வீட்டுக்கும் சரி சுற்றுப்புறத்திலும் சரி ஒழுக்கம் அவசியம் இருக்கனும், அதை எல்லாருமே கடைபிடிக்கனும்
இப்ப உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கறேன் எத்தனை பேர் வீடுகள்ல இது போன்ற புத்தகங்கள் இருக்கு தைரியமா சொல்லுங்க” என சொல்லி அவள் புத்தகங்களை காட்ட அதைப்பார்த்த சில மாணவர்கள் மட்டும் தயங்கி தயங்கியே கையை தூக்கினார்கள்
”அந்த புத்தகங்களை என்ன செய்தீங்க”