(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”டீச்சர் அது எங்களோடது இல்லை அப்பாவோடது”

  

”ஆனா அது தப்பானதாச்சே, அதை உங்க வீட்ல வைச்சிருக்க கூடாது நீங்க வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அந்த புத்தகங்கள் தப்பானதுன்னு உங்க அப்பாவுக்கு  எடுத்து சொல்லிட்டு அதை தீ வைச்சி எரிச்சிடுங்க”

  

”அப்பா திட்டுவாரு“

  

”திட்டமாட்டாங்க பயப்படாதீங்க நீங்க ஒண்ணும் தப்பு செய்யலையே, உங்களுக்கும் சரி உங்க அப்பாவுக்கும் சரி நல்லதுதானே செய்றீங்க, அதனால தைரியமா செய்ங்க யாரும் உங்களை ஒண்ணும் சொல்லமாட்டாங்க சரியா” என சொல்ல அவர்களும் சரியென்றார்கள்.

  

அதோடு அவளின் பேச்சு முடிந்துவிட்டதாக ஹெச்எம்மே அறிவித்து அனைத்து மாணவர்களையும் வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு கண்ணகியிடம் வந்தார்

  

”இப்ப நீ பள்ளியை விட்டு வெளிய போற நேரம் வந்துடுச்சி, இனிமேல பேச்சுக்கு கூட நீ இந்த பள்ளிக்குள்ள வரக்கூடாது, உனக்கான சம்பளம் வீடு தேடி வரும், அதுக்காக கூட நீ இங்க வரவேணாம், உனக்காக நான் எந்த சிபாரிசு கடிதமும் தரமாட்டேன்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்து

  

”என்கிட்ட உண்மையிருக்கு நேர்மையிருக்கு திறமையிருக்கு, அதை வைச்சி நான் வேலை தேடிக்குவேன் உங்க சிபாரிசு எனக்கு தேவையில்லை நான் வரேன் சார்” என கம்பீரமாகச் சொல்லிவிட்டு நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக கண்ணகி அந்த பள்ளியை விட்டு வெளியேறி சென்றாள். அவள் முகத்தில் வேலை போய்விட்டதே என்ற கவலையில்லை, மாறாக மகிழ்ச்சியே நிரம்பியிருந்தது அதைக்கண்ட உதயமூர்த்தி

  

”ஈஸ்வரா பார்த்தல்ல இந்த கண்ணகிதான் நம்ம கல்லூரிக்கு ஏத்தவ” என சொல்ல ஈஸ்வரமூர்த்தியோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.