எனக்குத் தெரியும், அந்த வேலை போனா என்ன உனக்கு நான் நல்ல வேலை தரேன் என்ன சொல்ற“
”என்ன வேலை சார் பாடம் எடுக்கற வேலையா”
”இல்லை பிரின்சிபால் வேலை“
”பிரின்சிபாலா நானா” என அவள் அதிர உதயமூர்த்தியோ மென்மையாக சிரித்தார்
”அந்த வேலைக்கு தகுதியானவ நீதான்”
”அவ்ளோ நம்பிக்கையா என் மேல”
”ஆமாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ங்கற மாதிரி உன்னோட நல்ல செயல்களே போதும் நீ எப்படிப்பட்டவள்ன்னு தெரிஞ்சிக்கலாம்”
”ஆனா சார் நான் பிரின்சிபால் ஆயிட்டா அப்புறம் நீங்க என்ன செய்வீங்க”
”நான் ரிட்டயர்டு ஆகப்போறேன், போறது போறோம் கல்லூரிக்கு நல்ல பிரின்சிபால் அமைச்சி வைச்சிட்டுப் போகலாம்னு நினைச்சேன், நீ கிடைச்சா அது கல்லூரிக்கு பாக்கியம்“
”இதுக்கு தாளாளர் ஒண்ணும் சொல்லலையா”
”அவரும் இன்னிக்கு பள்ளிக்கு வந்து உன்னோட பேச்சை கேட்டாரு”
”ஓஓஓ அப்படியா” என்றாள் வியப்பின் உச்சியில்
”ஆமாம் உண்மையை சொல்றேன், கோவலன் கலைக்கல்லூரி இப்போ மோசமான நிலைமையில இருக்கு, 5 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அந்த கல்லூரி நல்லபடியா இருந்தது ஆனா இப்ப என்னாலயே அந்த கல்லூரியை சரியா வழி நடத்த முடியலை”