ரிட்டயர்டு ஆகி ஓய்வெடுக்கறேன்”
”இந்த வேலை எத்தனை நாளுக்கு சார்”
”ஏன்மா இப்படி கேட்கற”
”நான் எந்த இடத்திலயும் அதிக நாள் வேலை செய்ததில்லை, நான் செய்ற செயல்களால என்னை சீக்கிரம் சீக்கிரமாவே வேலையை விட்டு எடுத்துடுவாங்க அதான்”
”நீ கவலையேப்படாத, இந்த கல்லூரியை விட்டு உன்னை அனுப்பிடமாட்டாங்க என்னிக்கிருந்தாலும் அந்த கல்லூரி உனக்குதான் சொந்தமாகப் போகுது”
”என்ன சொல்றீங்க சார் எனக்குப் புரியலையே”
”அட அதை விடும்மா நான் இப்ப கிளம்பறேன் நாளைக்கு காலையில 9 மணிக்கு கல்லூரிக்கு வந்து வேலையில சேர்ந்துடு”
”ஓகே சார் ரொம்ப நன்றி இப்படி வீடு தேடி வந்து வேலை தந்ததுக்கு”
”அவசியம் அவசரம் கூடவே கல்லூரியை காப்பாத்தனும்ங்கற எண்ணம் அதான் உன்னை தேடி வரவேண்டியதா போச்சி சரிம்மா நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு எழுந்தவர் அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்தார், அங்கு ஒரு சுவற்றில் இருவரது படங்கள் பிரேமிட்டு மாட்டப்பட்டு அதற்கு சந்தன மாலை அணிந்திருக்க அதைக்கண்டதும் அதிர்ந்தார்
”யார் இவங்க”
”என்னோட அப்பா அம்மா 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கார் விபத்துல அவங்க இறந்துட்டாங்க” என சொல்ல உதயமூர்த்திக்கு ஒரு மாதிரியாகிப் போனது. சட்டென அவர் பதட்டமாகி அவசர அவசரமாக கிளம்பிச் சென்றார்.
எப்படியோ தனக்கு ஒரு வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் கண்ணகி இருந்தாள்.