(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

“இல்லை உண்மையை மறைக்கப் போறேன்”

  

”ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்”

  

”அவளுக்கு உண்மை தெரியறவரைக்கும் மறைப்பேன், தெரிஞ்சபின்னாடி அவள் கேட்டா அப்போ சொல்றேன், அதுவரைக்கும் எதுக்கு பொய் சொல்லனும் அது தப்பு”

  

”என்னவோ இந்த விசயத்தை உன் பேரன்கிட்ட சொல்லிடு, சும்மாவே தாம்தூம்னு குதிப்பாப்ல”

  

”கவலையை விடு அவன் கம்பெனியை விட்டு வரட்டும் நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல உதயமூர்த்தியும் நிம்மதியானார்

  

மறுபக்கம் மாதவியோ மறுபடியும் கம்பெனிக்கு வந்தாள், அவளின் வரவை யாருமே எதிர்பார்க்கவில்லை அவளோ ஒரு முடிவுடன் வேலையில் இறங்கினாள், அவளது டீம் மெம்பர்கள்கூட அவள் போனதும் சோர்ந்து போயிருந்தார்கள், ஆனால் இப்போது அவர்களும் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள், இந்த செய்தி முதலாளி காதுக்கும் எட்டியது. அதில் அவருக்கும் ஆச்சர்யமே.

  

கம்பெனி வேலை நேரம் முடிந்து அனைவரும் கிளம்பிய பின்பும் மாதவி கிளம்பவில்லை, மாறாக வேலையில் மூழ்கியிருந்தாள், அவளுக்கு துணையாக அவளின் டீம் மெம்பர்களும் செல்லாமல் வேலை செய்தார்கள், இப்படி அப்படி என 15 நாட்களில் முடிக்க வேண்டிய ப்ராஜெக்டை இரவு 11.30 மணிக்கு முடித்தாள் மாதவி, அதற்கே அவள் சோர்ந்திருந்தாள்

  

அவளது டீம் மெம்பர்களுக்கு நிம்மதியாகிப் போனது, சோர்வு இருந்தாலும் வேலை முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் அனைவருமே குதூகலமாக இருந்தார்கள், மாதவியும் அந்த ப்ராஜெக்டை முதலாளியிடம் தந்தாள், ப்ராஜெக்ட் முடிந்ததால் முதலாளியும் அமைதியானார். அவளைப் பார்த்து குட் யூ கேன் கோ என அதிகாரமாகச் சொல்ல அதுவே பெரிய விசயம் என நினைத்து தன் டீம் மெம்பர்களுடன் கம்பெனி விட்டு வெளியேறி தன் வீடு திரும்பினாள் மாதவி.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.