(Reading time: 39 - 78 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”என்னய்யா என்னாச்சி கண்ணகி டீச்சர் எங்க”

  

”அய்யோ சார் அவங்க மறுபடியும் பெரிய பிரச்சனையை கொண்டு வந்துட்டாங்க, சீக்கிரமா வந்து பாருங்க வாங்க சார்” என அலற ஹெச்எம்மோ நொந்தபடியே எழ கூடவே ஈஸ்வரமூர்த்தியும் உதயமூர்த்தியும் எழுந்தார்கள்

  

”அய்யோ நீங்க ஏன் எழறீங்க நீங்க உட்காருங்க நான் போய் கண்ணகி டீச்சரை பார்த்து கூட்டிட்டு வரேன்” என சொல்ல ஈஸ்வரனோ

  

”பரவாயில்லை நாங்க அவங்களை நேராவே பார்த்துக்கறோம் எங்களையும் கூட்டிட்டுப் போங்க” என சொல்ல ஹெச்எம்மோ தயங்கினார் உதயமூர்த்தியோ

  

”அட வாங்க போவோம்” என அவரை அழைக்க வேறுவழியில்லாமல் ஹெச்எம் இவ்விருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார், ப்யூன் முன்னால் வேகமாக நடக்க பின்னால் இவர்கள் வந்தார்கள்.

  

ஒரு வகுப்பிற்குள் சென்றான் ப்யூன் கூடவே ஹெச் எம் நுழைந்தார். ஈஸ்வரமூர்த்தியும் உதயமூர்த்தியும் என்ன நடக்கிறது என வெளியே நின்று பார்வையிட்டார்கள்.

  

உள்ளே 25 வயது கண்ணகி டீச்சர் தன் முன்னே நின்றிருந்த ஒரு மாணவியின் தாய் தந்தையை பிரம்பால் அடித்துக் கொண்டிருக்க அவர்களோ வலியில் கதற ஹெச் எம் வந்து அவர்களை காப்பாற்றி கண்ணகியை தடுத்தார்

  

”கண்ணகி டீச்சர் என்ன இதெல்லாம் உங்களோட செயல் எல்லாம் வரம்பு மீறுது பேரன்ட்ஸை இப்படியா அடிக்கறது இது தப்பில்லையா”

  

”நான் நியாயத்தைதான் செய்தேன் தப்பு செய்தவங்க தண்டனை அனுபவிக்கறாங்க இதுல என்ன தப்பிருக்கு” என கெத்தாகச் சொல்ல அவரோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.