”என்னது என்ன சொன்ன இப்ப ஆமா நீ என்ன கேட்ட அய்யோ குழப்பறாளே”
”அது இருக்கட்டும் இன்னிக்கு முழுக்க இந்த வீட்டை டெக்ரேட் பண்ற வேலையைதான் செய்தீங்களா என்ன”
”ஆமாம் வீட்டு வேலைன்னா இவ்ளோதானே எல்லாத்தையும் ஒரே நாள்ல முடிச்சிட்டேன் இனி வீட்டு வேலை எதுவும் இல்லை” என்றான்
”அப்படின்னு யார் சொன்னது” என சொல்ல அவனோ குழம்பினான்
”வேற என்ன இருக்கு இந்த வீட்ல செய்றதுக்கு” என்றான் அதைக்கேட்க அவளோ கணக்குபிள்ளையிடம்
”அண்ணா இவரு என்ன அண்ணா பச்சை மண்ணா இருக்காரு, இவருக்கு எதுவும் சொல்லித்தந்து வளர்க்கலையா, அய்யோ பாவம் சரி சரி நானே எல்லாம் சொல்றேன் நீங்க லிஸ்ட்ல எழுதுங்க அண்ணா இல்லைன்னா இவர் மறந்துடுவாரு, ஒவ்வொரு முறையும் என்னால இவர்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது” என சொல்ல அவனும் உடனே ஒரு பேப்பருடன் அமர்ந்துவிட்டான்
காவேரி சொல்ல சொல்ல ஒன்று இரண்டு என வரிசையாக எழுதத் தொடங்கினான். அவளோ கொம்பனைப் பார்த்து பேசினாள்
”இந்த வீட்டு பொறுப்பு எடுக்கறதுன்னா சும்மா இந்த வீட்டை சுத்தம் செய்து அழகாக்கறது மட்டுமில்லை, வீட்டுக்கு தேவையானதை செய்யனும், அதாவது இந்த வீட்ல இருக்கறவங்களுக்கும் தேவையானதை செய்யனும், முதல்ல இந்த வீட்டுக்கு வரி கட்டனும், அப்புறம் கரண்ட் பில் கட்டனும், குழாய்வரி கட்டனும், சிலிண்டர் இருக்கா இல்லையா காலியாகுமான்னு பார்த்து அதை புக் பண்ணி வைக்கனும், சிலிண்டர் வந்ததும் அதை பத்திரமா வைக்கனும்
சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் இருக்கா இல்லை எதெல்லாம் குறைவா