”இனிமேல செய்வேன் பாரு”
”பார்க்கலாம் பார்க்கலாம், நீ கொண்டு வந்த லிஸ்ட் படியே வீட்டு பொறுப்புகளை பார்த்துக்க, அப்பதானே இந்த வீடு என்னோட வீடா இல்லாம உன்னோட வீடு போல இருக்கும், உன்னாலயும் நிம்மதியா தூங்க முடியும் நான் சொன்னது சரிதானே கொம்பா” என கேட்க அவனோ கோபமாக முறைக்க அவள் நிதானமாக எழுந்து நின்று அவனிடம்
”ஒத்துக்க ஆம்பளைங்களை விட பொம்பளைங்க எந்த விதத்திலயும் குறைஞ்சவங்க இல்லைன்னு, கொம்பன்னு பேர் வைச்சா உனக்கென்ன தலையில 2 கொம்பு முளைச்சிடுச்சின்னு நினைப்பா, நாலு பேருக்கு நீ நல்லது செஞ்சதுக்காக அந்த நாலு பேருவேணா உன் பேச்சை கேட்டு வருவாங்க, ஊரே வராது, நீதான் பெரியாளுங்கற மிதப்பில இருந்தல்ல உன் ஆணவம் இனிமேலயாவது அழியட்டும் வீட்டோட மாப்பிள்ளைன்னா என்ன நினைச்ச 3 வேளையும் கறி சோறு சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியா தூங்கி ஓய்வெடுக்கலாம்னா அதான் இல்லை, எப்படி ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்குப் போய் அந்த வீட்டு பொறுப்புகளை ஏத்துக்கிட்டு சிரமம் பார்க்காம வேலைகளை செய்து வரவுக்குள்ள செலவு செஞ்சி பணத்தை மிச்சம் செய்து சேமிச்சி வீட்டை நடத்தறாளோ அதே போல மாப்பிள்ளையும் செய்யனும், இதெல்லாம் செய்யாம சும்மா வெட்டியா அலைஞ்சன்னா ஊருக்குள்ள உனக்கிருக்கற மதிப்பு மரியாதையெல்லாம் குறைஞ்சிடும் உன்னை வெத்துபயல்ன்னு நினைப்பாங்க”
”போதும் நிப்பாட்டு” என்றான் கோபத்தில்
”கோபம் வருதா அச்சோ பாவம் சரி சரி லிஸ்ட் எழுதி லிஸ்ட் எழுதி டயர்டா வந்திருப்ப போ போய் சாப்பிட்டு தூங்கு, நாளையில இருந்து வீட்டு பொறுப்புகளை பார்த்துக்கனும்ல போடா கண்ணா போ”
”போடாவா ஏய் என்ன”
”ப்ச் போடா செல்லம் என் தங்கம்ல போ போ சமத்தா போய் சாப்பிட்டு தூங்கு நாளைக்கு உனக்கு தலைக்கு மேல வேலையிருக்குல்ல வீட்டு பொறுப்புகளை வேற சுமக்கனும்”