(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அதைபத்தி எனக்கு கவலையில்லை முதல்ல வீட்ல இருக்கற ஆம்பளைங்க ஒத்துக்கனும்”

  

”ஷ்ஷ்ஷ் இது என்னடா காலையில வந்த சோதனை சே” என அலுத்துக்கொண்டே அவளிடம்

  

”சரிம்மா தாயே ஆணும் பெண்ணும் சமம் ஒத்துக்கறேன் போதுமா”

  

”அலுத்துக்காத, எல்லா விசயத்திலயும் நீயும் நானும் சமமா இருக்கனும் அப்பதான் நமக்குள்ள சண்டையே வராது, நீ என்னை அடிமையாக்க நினைச்சாதான் சண்டை வரும்”

  

”அப்ப நீ என்னை அடிமையாக்க நினைக்கலை”

  

”இல்லை”

  

”அப்புறம் ஏன் நாம இங்க இருக்கனும் வா என் வீட்டுக்குப் போகலாம்”

  

”எப்பபாரு வீட்டுக்குப் போறதிலயே இருக்காத, இதுதான் உன் வீடு இங்க வாழ பழகிக்க”

  

”ம்க்கும் இது உன் வீடு நான் இங்க வெறும் மாப்பிள்ளைதான்“

  

”மாப்பிள்ளையும் இன்னொரு மகன் போலதானே”

  

”அதை உங்கப்பா நினைக்கனும்”

  

”நினைக்காமலா எல்லா பொறுப்புகளையும் உன்கிட்ட ஒப்படைச்சாரு”

  

”ஏன் உன்கிட்ட ஒப்படைக்கலை நீதான் இவ்ளோ வக்கனையா பேசிறியே எல்லா பொறுப்புகளையும் நீயே பார்த்துக்கறது”

  

”ஓ தாராளமா பார்த்துக்கறேன் அப்ப வீட்டு பொறுப்பை நீ பார்த்துக்கறியா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.