(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பேர் எடுக்காத”

  

”உண்மையை பேசினா அதுக்கு பேரு திமிர்பிடிச்சவளா, அதுசரி உங்களை மிஞ்சி நாங்க செயல்பட்டா அடங்காபிடாரின்னு சொல்ல வேண்டியது, நாலு நல்லது கெட்டது சொன்னா படிச்ச திமிர்ன்னு சொல்ல வேண்டியது, குடும்பத்துக்கு நாலு காசு சம்பாதிச்சி போட்டா பணத்திமிர்ல்ல ஆடறதா பேச வேண்டியது, அமைதியா இருந்தா ஊமைகுசும்புன்னு சொல்ல வேண்டியது, எதையாவது செய்துட்டா ஆணவம்ன்னு சொல்ல வேண்டியது, நின்னா தப்பு, உட்கார்ந்தா தப்பு, குனிஞ்சா தப்பு, நிமிர்ந்து நின்னாலும் தப்பு, இதையெல்லாம் பேசினா வாயாடின்னு பேர் வைக்க வேண்டியது, வாய்கொழுப்புன்னு குறை சொல்ல வேண்டியது, வேற எப்படிதான் இருக்கனுமாம் உங்கம்மா கூட ஒரு பொம்பளைதானே அவங்களை கூட இப்படித்தான் அடிமைமாதிரி நடத்துவியா”

  

”இப்ப எதுக்கு எங்கம்மாவை இழுக்கற, அவங்களை போல அமைதியானவங்க யாரும் இல்லை, எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தாங்கிப்பாங்க, என்ன பணம் தந்தாலும் அதுலயே செலவு செஞ்சி மிச்சம் பிடிச்சி வீட்டை நடத்துவாங்க, ஒருநாளும் கட்டிக்கிட்டவனையும் பெத்த மகனையும் குறை கூற மாட்டாங்க, அவங்க தெய்வத்துக்கு சமம் கண்கண்ட தெய்வம் அவங்க”

  

”பாருப்பா ஏதோ உங்கம்மாவையாவது மதிக்கிறியே, எங்க அவங்களையும் சாதாரண பொம்பளைன்னு நினைச்சி அவமானப்படுத்தாம இருந்தியே சந்தோஷம்”

  

”பின்ன அவங்க என் அம்மா அவங்களை நான் அவமானப்படுத்துவேனா”

  

”ஓஹோ அப்ப அம்மாவா இருந்தாதான் ஆம்பளைங்க மதிப்பாங்களா”

  

”அம்மா தாயே ஆளைவிடு இப்ப என்ன பிரச்சனை உனக்கு அதை சொல்லு”

  

”ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்னு நீ ஒத்துக்கனும்”

  

”நான் ஒத்துக்கிட்டா போதுமா இந்த ஊர் உலகம் ஒத்துக்காது”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.