”உன்னை மட்டும் எப்படி நம்பினாராம்“
”நான் செய்த ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆயிடுச்சி”
”அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்“
”உன் பேச்சைக் கேட்டு நைட் 11.30 வரைக்கும் அந்த வேலையை செய்தேன்ல, என்னோட சின்சியாரிட்டியைப் பார்த்து என்னை பிஏ ஆக்கிட்டாரு போல, இதுதான் நேரக்கொடுமைங்கறது, அந்தாளை கொஞ்ச நேரம் பார்க்கறதுக்கே எனக்கு கடுப்பாயிருக்கும், இதுல பிஏ வேற, பொழுதுக்கும் அவர்கூடவே இருக்கனும், சே வாழ்க்கையே வெறுத்துடும் கண்ணகி”
”ஆல் த பெஸ்ட்”
”எதுக்கு இப்ப இதை சொல்ற”
”இனி தினமும் உன்னோட முதலாளி டென்ஷனா வருவாப்ல, நீதான் அவரை சமாதானம் செய்யனும் அதுக்குதான் சொன்னேன்“
”என்னது நானா அய்யோ அந்த தேவாங்கை நான் சரியாக்கறதுக்கு நானும் தேவாங்கா மாறனுமா”
”மாறு தப்பில்லை தேவாங்கு“ என்றாள் கண்ணகி விளையாட்டாக அதில் மாதவிக்கு பொய் கோபம் வந்து அவளை அடிப்பது போல பாசாங்கு செய்ய அவள் அதில் இருந்து தப்பிக்க என இரு பெண்களும் சிறு பிள்ளைகளைப் போல விளையாடியபடியே அந்த நாளை ஓட்டினார்கள்.
மறுபக்கம் வீடு திரும்பிய கோவலனிடம் ஈஸ்வர மூர்த்தி பாடம் எடுத்தார்
”அய்யோ தாத்தா போதும், என்னால முடியலை காது வலிக்குது எதுக்கு என்னை நிக்க வைச்சி