பாடம் எடுக்கறீங்க, நான் என்ன தப்பு செய்தேன்“
”உன் பொறுப்புல விட்ட கல்லூரியோட நிலைமையை நீ நேர்ல பார்த்துமா தப்பே செய்யாதது போல பேசி வைக்கற”
”நான் என்னவோ நினைச்சேன் ஆனா என்னவோ நடந்துடுச்சி அதுக்கு நான் காரணமா”
”ஓ அப்ப வேற யார் காரணம், நான்தான், நானேதான் உன்னை நம்பி கல்லூரியை தந்ததுக்கு நானே எல்லா பிரச்சனைக்கும் பொறுப்பு ஏத்துக்கறேன் போதுமா“
“இப்ப என்ன பிரச்சனை வந்துடுச்சி, அதான் உங்களுக்கு பிடிச்ச பிரின்சிபாலை வேலைக்கு வைச்சாச்சே பிறகென்ன“
”என்னவா நாளைக்கு காலேஜ்ல ஸ்ட்ரைக் நடக்கப் போகுதாம் எனக்கு விசயம் வந்துடுச்சி உனக்கு வரலையா”
”என்னது ஸ்ட்ரைக்கா எதுக்காக“
”நாளைக்கு தெரியும் பாரு”
”ப்ச் இது என்ன புது பிரச்சனை, இதுவரைக்கும் அந்த காலேஜ்ல ஸ்ட்ரைக்கே நடந்ததில்லை, புது பிரின்சிபால் வந்ததுமே ஸ்ட்ரைக் நடக்குதுன்னா என்ன அர்த்தம்“
”என்ன அர்த்தம்”
”யாருக்குமே அந்த புது பிரின்சிபாலை பிடிக்கலைன்னு அர்த்தம்”
“போதும் நிறுத்து, ஸ்ட்ரைக்கை பத்தி யோசிப்பன்னு பார்த்தா புதுசா வந்த பொண்ணை குறை சொல்ற”
”என்னை என்ன செய்யச் சொல்றீங்க அவளோட கட்டுப்பாடுகள் கடுமையா இருந்ததால பாவம்