(Reading time: 35 - 70 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க, குருவுக்கு அடுத்துதான் அந்த தெய்வத்தையே சொல்வாங்க, அந்தளவுக்கு ஆசிரியர்கள் மதிப்பானவங்க அவங்க கடந்துப் போறப்ப மரியாதைக்கு கூட இங்கிருக்கற மாணவர்கள் வணக்கம் வைக்கலை, இதுதான் நீங்க தந்த சுதந்திரமா, பெரியவங்களை மதிக்கறதில்லை, நேரத்துக்கு வகுப்புக்கு போறதில்லை, இப்படியிருந்தா மாணவர்களோட எதிர்காலம் பூஜ்யம்தான்” என சொல்ல அவனுக்கு ஆத்திரமாக வந்தது

  

”இந்த காலேஜ்ல மாணவர்களும் ஆசிரியர்களும் ரொம்ப ப்ரெண்ட்லியா பழகறாங்க, அதனாலதான் யாரும் யாருக்கும் மரியாதை தரலை, அதுக்காக மாணவர்களை தப்பா நினைக்க வேணாம், அவங்க மனசுக்குள்ள மரியாதை தர்றாங்க”

  

”ஓ அப்படியா அப்போ மாணவர்கள் உங்ககிட்டயும் ப்ரெண்ட்லியாதான் பழகறாங்களா என்ன”

  

”அப்படியில்லை”

  

”அப்போ உங்களுக்கு அவங்க மரியாதை தரனும்ல”

  

”ஆமாம்”

  

”அப்ப நடந்து போங்க பார்க்கலாம், எத்தனை பேர் உங்களுக்கு மரியாதை தர்றாங்கன்னு” என நக்கலாக சொல்ல அவனும் அவளை முறைத்துவிட்டு டப் டப்பென நடந்தான்

  

கோட் சூட் அணிந்திருந்தான், காலில் ஷு வேறு அவன் நடக்கும் போது கம்பீரம் தெரிந்தது, ஆனால் யாருமே அவனுக்கு மரியாதையாக வணக்கம் வைக்கவில்லை, அவன் வரும் போது பவ்யமாக ஒதுங்கவும் இல்லை, யாரோ எவனோ என்பது போல மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி நடந்துக் கொள்ள அவனுக்கு அவமானமாக இருந்தது திரும்பி வந்து கண்ணகியிடம் நின்றான்

  

”சாரி சார் நான் கணக்கெடுத்த வரைக்கும் யாருமே உங்களுக்கு மரியாதை தரலை” என

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.