(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

வந்தான் கண்ணாடியில் அவனது உருவத்தைக்கண்டவள் அவனது செயலை வெகுவாக ரசித்தாள், ஆனாலும் சட்டென கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு தடாலடியாக திரும்பி அவனைப் பார்த்து முறைத்து

  

”எவ்ளோ தைரியம் இருந்தா என் அனுமதியில்லாம என் அறைக்கு வந்திருப்ப உன்னை எங்க அந்த அருவா எங்க அது” என தேடிப்பிடித்து அருவாளை எடுத்து அவனது கழுத்திடம் சென்று வைத்த நேரம் அவளின் இந்த செய்கையில் அதிர்ச்சியில் அவன் உடல் அதிர்ந்து அவன் கட்டியிருந்த டவல் அவிழ்ந்த நேரம் சரியாக இருந்தது.

  

காவேரியோ அவனை அந்த கோலத்தில் கண்டு பதட்டமாகி அருவாளை தரையில் நழுவவிட்டுவிட்டு திரும்பி நின்றுக் கொள்ள அவனுக்கு அவமானமாகிப் போனது, அவசர அவசரமாக டவலை எடுத்து சுற்றிக் கொண்டு பதட்டமாக வெளியேறி வர கணக்குபிள்ளையிடம் சிக்கினான்

  

”கொம்பா என்னடா பதட்டமா ஓடிவர்ற என்னாச்சி” என கேட்க அவனோ வேர்த்து விறுவிறுத்து இருக்க

  

”என்னடா ஆச்சி சொல்லு ஏன் இபபடியிருக்க” என கேட்க பின்னாடியே வந்தாள் காவேரி அவள் வரவும் அங்கு ஒரு நொடி கூட நிற்காமல் ஓடினான் கொம்பன்

  

”இவன் எதுக்கு இப்படி ஓடறான்” என காவேரியிடம் கேட்க அவளோ

  

”கொம்பனுக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை ஒரு பொண்ணுகிட்ட இப்படியா நடந்துக்கறது இதை நான் எதிர்பார்க்கலை சே சே” என கோபமாக சொல்லிவிட்டு செல்ல கணக்குபிள்ளை கலவரமாகி அவசர அவசரமாக கொம்பனைக் காணச் சென்றான். அங்கு கொம்பனோ உடையணிந்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தான்

  

”நண்பா டேய் என்னடா ஆச்சி ஏன் இப்படி சோகமா இருக்க”

  

”எல்லாமே போச்சி”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.