(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”இதைதான் நினைச்சேன் நீ செய்துட்ட” என சொல்ல அவளோ அதிர்ந்து சட்டென விலகி அவனைப் பார்க்க அவனோ கள்ளத்தனமாக சிரித்தான்

  

”சே என்னை ஏமாத்திட்டல்ல நீ, கேடி ராஸ்கல் என்கிட்டயே உன் சேட்டையா உன்னை என்ன செய்றேன் பாரு” என அவள் கத்த அவனோ சட்டென அவளை அணைத்தான் அந்த அணைப்பில் அவள் தன்னை மறந்தாள் அவளிடம் அமைதி வரவும் அவளை விட்டு விலகியவன்

  

”போ போய் உன் ரூம்ல படுத்து தூங்கு நாளைக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கு முடிக்கனும்” என சொல்ல அவளோ அமைதியாக எழுந்து உறங்கச் சென்றாள்.

  

அவள் சென்றதும் அவளின் அணைப்பை நினைத்தபடியே சந்தோஷமாக உறங்கலானான் கொம்பன். அவளுக்கும் இது புது அனுபவம் என்பதால் தூக்கத்தை தொலைத்தாள். ஆனால் தூக்கமோ அவளை தொலைக்க மனமின்றி அவளை வாரிஅணைத்துக் கொண்டது.

  

மறுநாள் காலையில் காவேரி சந்தோஷ மிகுதியில் புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறி வந்தாள் அவளின் மகிழ்ச்சியைக்கண்ட கணக்குபிள்ளையும் சண்முகமும் ஒருவரை ஒருவர் பார்த்து குழம்பினார்கள், அடுத்து கொம்பன் வந்தான் அதீத கூச்சத்துடன் உடலை வளைத்து நெளித்து என வெட்கப்பட்டுக் கொண்டே வந்தான் அவனைக்கண்டும் கணக்குபிள்ளையும் சண்முகமும் ஒருவரை ஒருவர் பார்த்து குழம்பினார்கள்.

  

காவேரியும் கொம்பனும் நேருக்கு நேராக சந்திக்கும் தருணம் வந்த போது வெட்கத்தில் தலைதாழ்த்தினான் கொம்பன், காவேரியோ கர்வத்துடன் அவனைப் பார்த்துவிட்டு குளிக்கச் சென்றாள். கொம்பனோ நாணிக்கொண்டே கணக்குபிள்ளையிடம் வந்து நிற்க அவனோ நொந்துப் போய் தலையில் அடித்துக் கொண்டான்

  

”கொம்பா நீ செய்றது வேடிக்கையா இருக்கு என்னடா ஆச்சி உனக்கு, எதுக்கு இப்படி வெட்கப்படற இதெல்லாம் பொண்ணுங்க செய்றது நீ வீரன்டா ஆம்பளை” என சொல்ல அவனோ

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.