(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

துணிவு தந்தது”

  

”அப்படியெல்லாம் இல்லை காவேரி உன் பின்னாடி நான் இல்லை உன் பின்னாடி உண்மையிருக்கு நியாயம் இருக்கு, அது இரண்டும்தான் உனக்கு தைரியத்தை தந்திருக்கு”

  

என சொல்ல அவளே ஆச்சர்யப்பட்டாள். பேசுவது கொம்பன்தானா என அவளே பிரமித்தாள்.

  

அன்றைய இரவு அனைவரும் உறங்கச் செல்ல காவேரிக்கு கொம்பனின் நினைவாகவே இருந்தது, அவனுடன் பேச வேண்டும் என்ற ஆசை உந்த அவளாக அவனைத் தேடிச் சென்றாள், அவனோ தனக்கென ஒரு அறையில் படுத்துக் கொண்டு உறங்காமல் காவேரியை பற்றிய சிந்தனையில் தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

  

அதைக்கண்டபடி வந்த காவேரியோ

  

”ம்க்கும்” என தொண்டையை செரும அவன் காவேரியைப் பார்த்து வியந்து

  

”என்ன முறைப்பொண்ணே இந்த பக்கம்”

  

”என் ரூம்ல காத்து வரலை அதான் இந்த பக்கம் காத்து வருதான்னு பார்க்க வந்தேன்”

  

”ஓ நிறைய வருது வா உட்காரு” என அவன் அழைக்க அவளோ சற்று கூச்சப்பட்டாள்

  

”என்ன கூச்சம் வா இது உன்னோட வீடுதானே”

  

”இருந்தாலும் இது உன்னோட ரூமாச்சே”

  

”இங்க இருக்கற எல்லாமே உன்னோடதுதான் என்னையும் சேர்த்து”

  

”ஆமா என்ன இவ்ளோ நேரம் ஆகியும் தூங்காம இருக்க என்னாச்சி தூக்கம் வரலையா”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.