”ஆணும் பெண்ணும் சமம்” என்றான் மென்மையாக
”அதை நீயா சொல்றது வர வர நீ மாறிக்கிட்டே இருக்க சரி போகட்டும் எதுக்கு இப்படி வெட்கப்படற காவேரி என்னடான்னா ரொம்ப சந்தோஷமா இருக்கா என்ன நடந்துச்சி உங்களுக்குள்ள” என கேட்க அவனோ பதட்டமானான்
”ஒண்ணும் நடக்கலையே யார் என்ன சொன்னது அப்படி ஏதும் இல்லையே” என பேச கணக்குபிள்ளை நம்பவில்லை
”கொம்பா நான் உன் நண்பன்டா, சின்னப்பல இருந்து உன்கூட இருக்கேன் உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் காரணம் என்னன்னு எனக்குத் தெரியும், நேத்து உனக்கும் காவேரிக்கும் நடுவுல என்னவோ நடந்திருக்கு அது என்ன சொல்லு” என கேட்க கொம்பனோ அநியாயத்திற்கு அசடு வழிய
”டேய் என்னடா ஆச்சு உனக்கு வா வா இப்பவே நாம தர்கா போலாம் உனக்கு மந்திரிச்சி உட்டாதான் வேலைக்கு ஆகும்“
”டேய் அதெல்லாம் இல்லை”
”பின்ன என்னடா நடந்துச்சி உனக்கு சொல்டா”
”அவ இருக்காளே அவள் காவேரி”
”இருக்கா சொல்லு அப்புறம்”
”என் முறைபொண்ணு இருக்காள்ல அவள் அவள்”
”இழுக்காதடா சொல்லித்தொலை”