(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

போனான்

  

”அடப்பாவிங்களா இப்பதான் கட்டிப்பிடிக்கறதுக்கே வந்தீங்களா, அதுக்கேவா இவ்ளோ சந்தோஷம் ஷ்ஷ் யப்பா முடியலை, இவங்க எப்ப ஒண்ணு சேர்றது எனக்கு எப்ப கல்யாணம் ஆகறது, டவுட்தான்”

  

”சும்மாயிரு நீ ஒண்ணு இவ்ளோ கிட்ட வந்துட்டாங்கள்ல இனி என்ன எல்லாம் ஒண்ணாயிடுவாங்க, பார்த்துக்கிட்டே இரு கூடிய சீக்கிரம் என் பொண்ணு அவளோட புகுந்த வீட்டுக்கு புருஷனோட போவா” என சண்முகம் சொல்லிவிட்டு சந்தோஷமாகச் செல்ல கணக்குப்பிள்ளையோ

  

”அதுக்குள்ள வேற எந்த பிரச்சனையும் இவங்களுக்கு நடுவில வந்துடக்கூடாது கடவுளே” என வேண்டிக் கொண்டான்.

  

குளித்து முடித்து வந்த காவேரியோ கிணற்றடியில் நீர் இறைத்துக் கொண்டிருந்த கொம்பனைக்கண்டு பரவசமடைந்தாள். அவள் வந்ததை அவன் அறியவில்லை அவளோ பூனை போல மெல்ல நடந்து அவனிடம் வந்து அவன் எதிர்பாராத நேரம் சட்டென அவனை பின்புறமாக அணைத்துவிட்டு விலகி வீட்டிற்குள் ஓட அவன் அந்த அதிர்வில் குடத்தை விட்டான் கிணற்றில்.

  

ஓடிச் சென்ற காவேரியைக்கண்டு புன்னகைத்தபடி நிற்க அங்கு வந்த கணக்குபிள்ளையோ

  

”நண்பா எதுக்குடா என் தங்கச்சி ஓட்டபந்தயத்தில கலந்துக்கிட்டது போல இந்த ஓட்டம் ஓடறா நீ என்ன அவளை அடிக்க வந்தியா”

  

”சே சே அவள்தான் என்னை கட்டிப்பிடிச்சிட்டு ஓடிட்டா”

  

”இதுவேறயா ஆமா அவள் கட்டிப்பிடிக்கறப்ப நீ என்ன செய்துக்கிட்டு இருந்த”

  

”கிணத்துல நீர் இறைச்சிக்கிட்டு இருந்தேன்” என சொல்ல அவனோ தலையில் அடித்துக் கொண்டு

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.