(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

செய்யலாம்னு நினைச்சோம், வீட்டுக்கு வந்தா நல்லாயிருக்காது எப்படியும் தோப்புல இருப்பான்னு இங்க வந்தோம்”

  

”இல்லை மாமா வீட்டு பொறுப்புகளை எப்ப உங்க மகன் எடுத்துக்கிட்டாரோ அப்ப இருந்து அவர் இந்த பக்கம் வர்றதில்லை, நான்தான் தோப்பை பார்த்துக்கறேன்”

  

”சின்ன பொண்ணு நீ, அனுபவம் கூட இல்லை உன்னால எப்படி தோப்பை பார்த்துக்க முடியும்”

  

”முடியும்ங்கற நம்பிக்கையிலதான் மாமா”

  

“இருந்தாலும் இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்ப, நான் வேணா கொம்பனை வரவழைக்கவா அவன் ஒரு போடு போட்டான்னு வையேன் தன்னால இவன் இந்த திசை பக்கம் கூட வரமாட்டான்”

  

”போதும் மாமா அவரை ஊர்க்காரங்கதான் அடியாள் போல ஆக்கி வைச்சிருக்காங்கன்னா நீங்களுமா”

  

”இல்லைம்மா இது நம்ம பிரச்சனை நம்ம இடத்து மேல தகராறு செய்றவனை அடிக்கறது தப்பில்லையே”

  

”வேணாம் மாமா இப்பதான் அவர் உருப்படியா இருக்காரு, மறுபடியும் அவரை அடியாளா ஆக்கிடாதீங்க மாமா இந்த பிரச்சனையை எப்படி கையாளனும்னு எனக்கு நல்லாவே தெரியும் இதைபத்தி ஏற்கனவே எங்கப்பா என்கிட்ட சொல்லியிருக்காரு அப்ப நான் அவருக்கு பல யோசனைகளை சொன்னேன் ஆனா அவர் பயந்துக்கிட்டு செய்யாம விட்டாரு ஆனா நான் அப்படியில்லை, இந்த பிரச்சனையை எப்படி தீர்க்கறேன்னு பாருங்க” என சொல்ல பக்கத்து நிலக்காரனோ இளப்பமாக சிரித்தான்.

  

அவளோ அவனது சிரிப்பைக்கண்டு கோபம் கொள்ளாமல் அங்கு வேலை செய்யும் தனது வேலையாளை அழைத்து காவல்துறையை அழைத்து வரும்படி சொல்ல அவனும் வேகமாக சென்றான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.