என சொல்ல அவர்களோ தயங்க
”இப்ப செக் பண்ணப் போறீங்களா இல்லை வேலையை விடப்போறீங்களா” என மிரட்ட அதில் அவர்கள் அவள் சொன்னதை செய்ய ஆரம்பித்தார்கள்.
எந்த மாணவனின் பையிலும் புத்தகமோ நோட்டோ இல்லை, அட பேனா கூட இல்லை, சில மாணவர்கள் பையில் பாட புத்தகத்திற்கு பதிலாக கலவி புத்தகம் இருக்கவே அதைக்கண்டு வியந்தாள்.
”ஓ பரவாயில்லையே ஏதோ இந்த புத்தகமாவது வைச்சிருக்கீங்களே” என சொல்லியவள் கோவலனிடம்
”பரவாயில்லை நீங்க கொடுத்த சுதந்திரம் எதுவரைக்கும் வந்திருக்கு பாருங்க, செமஸ்டருக்கு இந்த கலவி புத்தகத்தில இருந்து கேள்வி வருமா என்ன” என நக்கலாக கேட்க கோவலனுக்கு வந்ததே கோபம் எழுந்து உக்கிரமாக கத்தினான்
”என்ன நடக்குது இங்க, இது என்ன காலேஜா இல்லை வேற ஏதாவதா, நீங்கள்லாம் ஸ்டூடன்ஸா, சே உங்களுக்கு நான் சுதந்திரம் கொடுத்தது எதுக்கு, நான் கொடுத்த சுதந்திரத்தை இப்படி கேவலைப்படுத்திட்டீங்களே சே” என கோபத்தில் வெடிக்க அதைக்கேட்ட மாணவர்கள் வருந்தினார்கள், சில மாணவர்கள் சாரி சார் என்றார்கள் ஆசிரியர்கள் அவமானத்தில் தலைதாழ்த்தினார்கள்
”பிரின்சிபால் சொன்னது போல 15 நாள்ல செமஸ்டர் எக்ஸாம் இருக்கு, அதுல பெயில் ஆனா இந்த காலேஜ்ல தொடர்ந்து படிக்கவும் முடியாது வேற எங்கயும் படிக்கவும் முடியாது” என்றான் கோவலன் அதைக்கேட்டு மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருமே கதிகலங்கிப் போய் கோவலனிடம் கெஞ்சினார்கள், அவன் மனம் இறங்கவில்லை அனைத்தும் செய்த கண்ணகியே பெருந்தன்மையாக அனைவரிடமும் சத்தமாக பேசினாள்
”சரி சரி நீங்க செஞ்சதை நான் மன்னிக்கிறேன், இதுவரைக்கும் நீங்க சுதந்திரமா இருந்தது போதும், இனிமேல ஒழுக்கமா இருக்கனும், பாடம் படிக்கனும் அப்படி இருந்தா சொல்லுங்க,