(Reading time: 19 - 38 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”சரி நானே சொல்றேன்”

  

தெரிந்தே பொய் கூறக்கூடாது. நடக்காது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்த முயலக் கூடாது. பாம்போடு விளையாடக்கூடாது. பண்பு இல்லாரோடு பழகக்கூடாது. தனியாக ஒருவரும் இல்லாத வழியில் செல்லக் கூடாது. பிறர் கெடுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. மனமே! மலைநாட்டின் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.

  

  

”இன்னிக்கு இந்த நீதிமொழி போதும், எல்லாருக்கும் எல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், அடுத்த முறை ஸ்ட்ரைக்குன்னு ஆரம்பிச்சா விளைவுகள் இன்னும் மோசமாயிருக்கும், அதை விட்டுட்டு செமஸ்டர் எக்ஸாம்க்கு படிக்கற வழியைப் பாருங்க எல்லாரும் போகலாம்” என கட்டளையிட அத்துடன் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

  

மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றார்கள். ஆசிரியர்கள் அவசர அவசரமாக பாடம் எடுக்க ஓடினார்கள்.

  

சிலம்பரசன் மட்டும் கண்ணகியின் புத்திசாலித்தனத்தை நினைத்து மெச்சினாலும் அவனுக்குள் பழிவாங்கும் எண்ணம் அதிகமானது.

  

கோவலனோ கண்ணகியிடம்

  

”எப்படியோ ஸ்ட்ரைக் பெரிசாகலை”

  

”ஓகே சார் இப்ப என்ன இங்க இருக்கீங்களா இல்லை கம்பெனிக்கு போறீங்களா”

  

”இனி எனக்கு இங்க என்ன வேலை அதான் நீயே எல்லாம் செய்துட்டியே”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.