”இன்னிக்கு இவன் போக மாட்டான் போல இருக்கே” என புலம்பிக் கொண்டே கொம்பனை பார்த்து ஈஈஈ என இளித்தாள்
”என்ன இளிப்பு, இதெல்லாம் என்கிட்ட வேணாம்”
”சுத்தம் சரியான கேனையா இருக்கானே” என புலம்பிக் கொண்டே அவனிடம்
”முதல் பாடம் முக்கியமான பாடம் அதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்லு நீ காவேரியை ஏன் காதலிக்க ஆசைப்படற”
”என்னோட முறைப்பொண்ணை நான் காதலிக்கனும்னு ஆசைப்படக்கூடாதா”
”அவள் உன்னை விரும்பறாளா”
”இல்லையே”
”இல்லைன்னு உனக்குத் தெரியுமா”
”தெரியாது”
”ஒருவேளை அவளும் உன்னை காதலிச்சா என்ன செய்வ”
”சந்தோஷப்படுவேன்”
“அப்புறம் என்ன செய்வ“
”என்ன செய்வேன் அவளை கூட்டிக்கிட்டு ஊர் சுத்துவேன், சினிமாக்கு போய் வருவேன், அவள் கேட்கறதெல்லாம் வாங்கித்தருவேன், அவள் பேரை கூட என் கையில பச்சை குத்திக்குவேன்”