(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”அதான் உங்க கோபம் தணிஞ்சிடுச்சே நான் இப்ப கிளம்பட்டுமா”

  

”மலையளவு கோபத்தோட வந்தேன் நீ 2 நிமிடம் பேசினா உடனே பனி போல மாறிடறேன் உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு மாதவி”

  

”மேஜிக்கா நான் என்ன சூனியக்காரி போலவா இருக்கேன்”

  

”அப்படி சொல்லலை என்னோட உணர்வுகளை மதிக்கற, எனக்கு ஆதரவா நீ பேசறப்ப அதை கேட்க எனக்கு நிம்மதியா இருக்கு மாதவி“

  

”சரி நான் கிளம்பறேன்”

  

”இரு என்ன அவசரம்“

  

”அதான் சொன்னேனே ஷாப்பிங் போகனும்னு”

  

”ஓ சரி சரி கிளம்பு” என சொல்ல அவளும் அத்தோடு கிளம்ப அவள் பின்னாடியே பாலோ செய்துக் கொண்டு சென்றான் கோவலன், அதை அவள் அறியவில்லை கண்ணகி இப்போது ஒரு கல்லூரிக்கே பிரின்சிபால், அவளின் உடை பார்க்க எப்படியிருக்க வேண்டும், அதன் காரணமாக அவளுக்கு நல்ல புடவைகள் வாங்க சென்றாள்.

  

துணிக்கடையில் புடவைகள் செக்ஷனில் அவள் இருக்க அவளை நோட்டம் விட்டபடியே கோவலனும் இருந்தான்.

  

ஒவ்வொரு புடவையையும் முதலில் அவள் தனக்கு மேல் வைத்துப் பார்த்தாள், காரணம் கண்ணகியும் மாதவியும் ஒரே மாதிரியான அழகு உயரம், அதனால் அவள் புடவை எடுப்பதை கண்டு கோவலன் தவறாக புரிந்துக் கொண்டான், அவளுக்காகதான் அவள் புடவை எடுக்கிறாள் என நினைத்தான்.

  

மாதவியோ 5 புடவைகள் எடுத்து வைத்துவிட்டு ஆறாவது புடவையை எடுக்கும் சமயம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.