(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

கோவலன் இருப்பதைக்கண்டுக் கொண்டு நொந்துப் போய் அவனிடம் சென்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்

  

”என்னை விடமாட்டீங்களா கோவலன், இங்கயுமா வரனும், இது லேடீஸ் செக்ஷன் பாருங்க சுத்திலும் பெண்கள்தான் இருக்காங்க, இவங்களுக்கு நடுவில நீங்க என்ன செய்றீங்க யாராவது பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்களா”

  

”நான் வந்தது இங்கிருக்கற பெண்களுக்காக இல்லை உனக்காக மட்டும்தான் ஆமா என்ன இது புடவையா உனக்கு புடவை கட்ட வருமா” என கேட்க அவளோ வியந்து

  

”ஒரு பொண்ணுக்கு புடவை கட்ட வராதா என்ன“

  

”உன்னை இதுவரைக்கும் புடவையில நான் பார்க்கலையே அதான் கேட்டேன்“

  

”கட்ட வேண்டிய அவசியம் வந்ததில்லை, ஏதாவது விழா விசேஷம்னா கட்டுவேன், மத்தப்படி எனக்கு இந்த ஜீன்ஸ் சர்ட்தான் கம்பர்டபிளா இருக்கும்”

  

”சுடிதார் போடறதில்லையா”

  

”அதெல்லாம் நான் காலேஜ் படிக்கறதோட முடிஞ்சிடுச்சி”

  

”ஓஹோ”

  

”சரி சரி கிளம்புங்க”

  

”என்ன அவசரம் இரு நான் உனக்கு புடவை செலக்ட் பண்ண உதவறேன்”

  

”அதெல்லாம் வேணாம் நானே 5 புடவைகள் எடுத்து வைச்சிட்டேன்”

  

”நானும் பார்த்தேன் காட்டன் புடவைகள் எல்லாமே ஒண்ணு கூட பார்ட்டிக்கு போற மாதிரியில்லையே“

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.