(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

சாப்பாடு செய்தேன் அது கேவலமா வந்தா நான் என்ன செய்றது”

  

”சே உங்களை போல ஒருத்தரை நான் பார்த்ததில்லை, கல்யாணம் செய்துக்கிட்டா மட்டும் போதாது பொண்டாட்டியை வைச்சி 3 வேளை கஞ்சியாவது ஊத்தனும் இங்க அதுக்கும் வழியை காணோம்”

  

”அட நிப்பாட்டு, எதுக்கு குதிக்கற அதான் வக்கனையா எங்கம்மா செய்த சாப்பாட்டை சாப்பிட்டல்ல, அப்புறம் என்ன நாங்களாவது பட்டினியா இருக்கோம் சும்மா குதிக்கற”

  

”ஓஹோ இப்படி வேற நடக்குதா அவங்ககிட்ட சொல்லி கேரியரை மாத்தி வைச்சியா இது உனக்கே அசிங்கமா இல்லை”

  

“ஏய் நான் எதுவும் சொல்லலை எங்கம்மா என்னைக் காப்பாத்த அப்படி செய்தாங்க இதுல அசிங்கப்பட என்ன இருக்கு அவங்களோட பாசத்தை பாரு”

  

”ராத்திரியும் எப்படி அவங்களே கேரியர் அனுப்பி வைப்பாங்களா“

  

”அதெல்லாம் தெரியாது”

  

”உன்னால எனக்கு தலையே வலிக்குது சூடா காபி கொண்டா போ அப்புறம் ராத்தரிக்கு நீதான் சமைக்கனும், இதுபோல கேவலமா சமைக்க கூடாது சாப்பாடு நல்லாயிருக்கனும் உங்கம்மாவை இதுல இழுக்க கூடாது சரியா”

  

”இழுக்கலை போதுமா போ காபி கொண்டு வரேன்” என சொல்லிவிட அவளும் வேகமாக தன் அறைக்குச் சென்றாள்.

  

அவள் சென்றதும் கொம்பனோ பெருமூச்சுவிட எங்கிருந்தோ கொம்பா மகனே கொம்பா என ஈனக்குரலில் அழைப்பு வரவும் என்னவென சுற்றி முற்றி பார்க்க அங்கு ஒரு ஓரமாக கொம்பனின் தாய் நின்றிருந்தார், அவரைக்கண்டதும் கொம்பன் அவசரமாக அவரிடம் சென்றான்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.