பெத்துட்டு அது கஷ்டப்படறதை பார்த்துட்டு நிம்மதியா இருக்க முடியாம அல்லாடிக்கிட்டு இருக்காரு”
”அவரை பத்திரமா பார்த்துக்கம்மா, இந்த கஷ்டம்லாம் எத்தனை நாளோ நானே பட்டுக்கறேன், என்னை நினைச்சி அவர் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக்கப் போறாரு”
”சரிடா அவரை நான் பார்த்துக்கறேன்”
”நீயும் பாரு நான் எப்படியிருக்கன்னு, என்னோட தைரியமே நீதான் நீயும் இப்படி வருத்தப்பட்டுக்கிட்டு நின்னா எப்படிம்மா, நீங்க ரெண்டு பேரும் அங்க நல்லாயிருந்தாதானே இங்க நான் நிம்மதியா இருக்க முடியும்” என சொல்ல கணக்குபிள்ளையோ
”கொம்பா” என அழைத்தான் அவனைப் பார்த்துவிட்டு தன் தாயிடம்
”சரி சரி என் பொண்டாட்டிக்கு காபி வேற போய் போடனும், லேட்டாகுது விட்டா தேடிவந்து திட்டுவா நான் கிளம்பறேன்மா, நீ அப்படி போ நான் இப்படி போறேன்”
”கொம்பா”
”என்னம்மா”
”நீ சந்தோஷமாதானே இருக்க” என கேட்க அதற்கு கொம்பனிடம் பதில் இல்லை மாறாக அவன் கண்கள் கலங்கினான், அந்த கண்ணீர் அவனின் தாயை தீயாய் சுட்டது.
கணக்குபிள்ளையோ வீட்டின் உள்ளேயும் கொம்பனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்
”டேய் கொம்பா வாடா உன் பொண்டாட்டி வந்துட்டா பிரச்சனையாயிடும்” என அலறினான்
அதில் கொம்பனே அவசரமாக சென்றுவிட அவனது தாயோ துக்கம் தொண்டையடைக்க முந்தானையால் தன் கண்ணீரை துடைத்தபடியே வீடு சென்று சேர்ந்தார்