”என்னாச்சி கேரியர்தானே கொடுக்கப் போன இப்ப ஏன் கண்கலங்கற மகனோட நினைப்பு வாட்டுதா” என கொம்பனின் தந்தை கேட்க அதற்கு அவரின் மனைவியோ
”என்னத்த சொல்ல, அங்க என் புள்ள கஷ்டப்படறான் நீ சந்தோஷமா இருக்கியான்னு கேட்டா கண் கலங்கறான், எனக்கு எப்படியிருந்தது தெரியுமா, தவமா தவமிருந்து கோயில் குளமா சுத்தி பத்து மாசம் கஷ்டப்பட்டு பெத்தேன், நம்ம வீட்ல இருந்தவரைக்கும் ஒரு குறையும் இல்லாம அவனை வளர்த்து ஆளாக்கினேன், இப்போ அவனோட மாமனார் வீட்ல அப்படி கஷ்டப்படறான், ஒரு சுத்து இளைச்சிட்டான் தெரியுமா பார்க்கவே கஷ்டமாயிருக்குங்க”
”சரி விடு என்ன செய்றது கட்டிக்கொடுத்தாச்சி கஷ்டமோ சுகமோ அவன்தானே அனுபவிக்கனும்”
”பாவம்ங்க நம்மளை விட்டா அவனுக்கு உலகமே தெரியாது, அந்த வீட்ல வேலைக்காரன் போல அடைஞ்சிக் கிடக்கறான்ங்க, பார்க்கவே முடியலைங்க”
”சரிவிடு எது எப்படியோ நீ கொடுத்த கேரியரை வாங்கிக்கிட்டான்ல”
”வாங்கிக்கிட்டான் அதுக்கே ஏன் வந்த எதுக்கு வந்த அவள் பார்த்துடப் போறா போ போன்னு விரட்டறான், அந்தளவுக்கு அவனை பயமுறுத்தி வைச்சிருக்காள்ங்க”
”ப்ச் விடும்மா எல்லாம் தெரிஞ்சிதானே அவனை அங்க அனுப்பி வைச்சோம், இப்ப வந்து அய்யோ ஒய்யோன்னா எப்படிம்மா, எல்லாம் தன்னால மாறிடும் அவனும் போக போக குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ப பழகிக்குவான்”
”பழகறதுக்குள்ளயே என் புள்ள வாழ்க்கையை வெறுத்துடுவான் போல இருக்குங்க”
”அதெல்லாம் ஒண்ணும் ஆகாது ஆமா வேற என்ன சொன்னான்”