“மாதவி வண்டி வந்துடுச்சி வா போலாம்”
என சொல்ல அவளும் வந்தாள் என்ன மாடர்ன் உடையில் வரவே அதிர்ந்தாள் கண்ணகி
”இந்த உடையிலயா விளையாடாத மாதவி, நீ இப்போ ஆசிரியர் இப்படியெல்லாம் வரக்கூடாது ஏற்கனவே அங்கிருக்கற மாணவர்கள் வில்லங்கமானவங்க, உன்னை இப்படி பார்த்தா உனக்குதான் ஆபத்து“
”சாரி கண்ணகி வழக்கம் போல ரெடியாயிட்டேன் இரு நான் போய் புடவை உடுத்திட்டு வரேன்”
”எனக்காக நீ வாங்கி வந்த புடவைகள் இருக்கு அதை எடுத்துக்க”
“அப்ப உனக்கு”
”எனக்கு இருக்கறதே போதும், உன்கிட்ட ஏது புடவைகள் சொல்லு அதனால அதை நீ எடுத்துக்க நேரமாகுது சட்டுன்னு வா” என அதட்ட அதில் அவளும் பரபரவென ரெடியாகச் சென்றாள் முழுதாக 10 நிமிடம் கழித்து புடவை கட்டி ஆசிரியர் போலவே வந்தாள் கையில் குடை வேறு அதைக்கண்ட கண்ணகி சிரித்தாள்
”இந்த குடை எதுக்கு”
”ஆசிரியர்னா குடை வேணாமா”
”அலப்பறை செய்யாதடி போறதும் வர்றதும் கார்லதானே டைம் ஆகுது அதை வைச்சிட்டு வா போலாம்”
”சரிடி”