(Reading time: 24 - 47 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”ஆஆ அப்புறம் காலேஜ்க்குள்ள நான் பிரின்சிபால், நீ ஆசிரியர் அதை மறந்துட்டு இப்படி டீ போட்டு பேசிடாத, எதுவாயிருந்தாலும் இந்த வீட்டுக்குள்ள வைச்சிக்க சரியா அங்க நீ என் தோழின்னு தெரிஞ்சா அப்புறம் எல்லாரும் உன்னை வெறுத்துடுவாங்க”

  

”எனக்குப் புரியுது உன்னை எனக்கு தெரியும்ங்கற மாதிரி நான் காட்டிக்க மாட்டேன் போதுமா”

  

”சரி வா நேரமாகுது”

  

”எப்படி வர்றது“

  

”எப்படின்னா அதான் வண்டி வந்திருக்குல்ல”

  

”இப்பதானே நீ சொன்னே மறந்துட்டியா நீயே என்னை உன் தோழின்னு முதல் நாளே சொல்லிடுவ போல”

  

”உன்னைதான் அங்க எல்லாரும் பார்த்திருக்காங்களே”

  

”இருக்கலாம் ஆனா ஆசிரியர்கள் முன்னாடி எதுக்கு வேணாம் நான் வழக்கம் போல ஸ்கூட்டியில் வந்துடறேன் நீ கார்ல போ”

  

”என்ன மாதவி இப்படி பேசற”

  

”இதுதான் சரியா வரும், நீ பிரின்சிபால் உனக்காக கார் வந்திருக்கு அதுல நீ கெத்தா போய் இறங்கு அப்ப உன் மேல மதிப்பும் மரியாதையும் வரும்”

  

”சரி நான் கிளம்பறேன் நீயும் வந்துடு”

  

என சொல்லிவிட்டு கண்ணகி காரில் ஏறிச் சென்றுவிட மாதவியோ தன் ஸ்கூட்டியில் கல்லூரி நோக்கி பயணித்தாள்.

  

2 comments

  • தயவுசெய்து, ஹீரோ புது வாத்தியாராக வேலைக்கு வரப்போறானு கதைய மாத்திடாதீங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.