நின்றுப் பார்த்தாள் கண்கள் சிவந்திருக்க கன்னம் வீங்கியிருக்க
”ஏய் என்னடி இப்படியிருக்க, ரொம்ப நேரமா அழுதுக்கிட்டு இருந்தியா”
”ஆமாம் கண்ணகி” என சொல்ல அவளுக்கு அவளின் பாசம் கண்டு மனம் நெகிழ்ந்தாள்
ஈஸ்வரமூர்த்தியோ அவ்விருவரின் நட்பைக்கண்டு பூரித்துப் போனார், கண்ணகி மாதவிக்கு ஈஸ்வரமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்து அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
அங்கு ஈஸ்வரமூர்த்தி கண்ணகியின் பெற்றோர் போட்டோவை பார்த்து திடுக்கிட்டார் ஆனாலும் தனது உணர்ச்சியை வெளிக்காட்டாமல்
”சரிம்மா நல்லா படுத்து தூங்கு, காலையில நான் வண்டி அனுப்பறேன் காலேஜ்க்கு வந்துடு”
”எதுக்கு சார் வண்டியெல்லாம் நான் என் தோழியோட வந்துடுவேன்” என சொல்ல மாதவியோ
”என்னை மன்னிச்சிடு கண்ணகி உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்”
”என்னது அது”
”நான் வேலையை விட்டுட்டேன்”
”ஏன்”
”உனக்காகதான்”
”புரியலை”
”உன்னை இந்தளவுக்கு கொண்டு வந்தவர் கம்பெனியில இனி நான் வேலை செய்றதா இல்லை, அன்னிக்கு நீ சொன்னியே காலேஜ்க்கு வா வேலை போட்டு தரேன்னு இப்ப நான் வரேன் உன்கூடவே இருக்கேன் கண்ணகி, என்னையும் கூட்டிட்டுப் போ“ என சொல்ல