வந்து என்னை டேட்டிங்குக்கு கூப்பிட்டான்”
”என்ன உன்னை டேட்டிங்க்கு கூப்பிட்டானா”
”ஆமாம் ஆனா எனக்கு அவனோட அப்ரோச் பிடிக்கலை நான் வரமாட்டேன்னு சொல்லிட்டேன்”
”நல்லது அவனை நம்பாத மாதவி”
”நான் நம்பலை ஆனா அவன் என்கிட்ட போன் நெம்பர் தந்தான் கூடவே தான் தங்கியிருக்கற இடத்தையும் சொன்னான்”
”இடமா எங்க தங்கியிருக்கானாம்” என கேட்க அந்நேரம் அவளுக்கு நினைவு வந்தது சட்டென அந்த இடத்தின் முகவரியைச் சொல்ல அதைக்கேட்டதும் முகம் மலர்ந்தான் கோவலன்
”இது போதும் மாதவி இதை வைச்சே நான் அவனை பிடிச்சிடறேன்“
”கண்ணகியை காப்பாத்துங்க”
”கண்டிப்பா அவளை காப்பாத்த வேண்டியது என்னோட கடமை”
”சரி நான் வைச்சிடறேன்” என சொல்லி போனை கட் செய்த மாதவியோ
”அய்யோ கண்ணகி பாவம்டி நீ, இப்படி வசமா மாட்டிக்கிட்டியே எப்படியாவது நீ வெளிய வரனும், கடவுளே உனக்கு கண் இல்லையா நல்லவங்களைதான் சோதிப்பியா நீ” என அவள் புலம்பிக் கொண்டே வீட்டில் இருந்த பூஜையறைக்குச் சென்று கண்ணகிக்காக வேண்டினாள்.
கோவலனோ மாதவி சொன்ன முகவரிக்கு அவசரமாகச் சென்றான் அங்கு சிலம்பு இருக்கவும் அவனை பிடித்தான்
”நண்பா என்ன செய்ற நீ விடு”