(Reading time: 24 - 47 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

யோசிக்கற, உன்னை போல ஒரு நேர்மையான குணம் படைச்சவங்களை நான் எங்க போய் தேடறது”

  

”அப்போ நான் காலேஜ்க்கு போகலாமா”

  

”தாராளமா”

  

”ஆனா இந்த முறை காலேஜ்ல நான் எடுக்கற முடிவுக்கு யாரும் தடை சொல்லக்கூடாது முக்கியமா நீங்க உங்க பேரன்”

  

”அது உன்னோட காலேஜ், அந்த காலேஜ் நல்லதுக்காக நீ எந்த முடிவெடுத்தாலும் சரி நானோ என் பேரனோ குறுக்க வரமாட்டோம்”

  

”இன்னும் ஒரு மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வருது, அங்க வேலை செய்ற ஆசிரியர்களை நம்பினா வேலைக்கு ஆகாது, அதனால எல்லா ஆசிரியர்களையும் நான் மாத்திட்டு புது ஆசிரியர்களை நியமிக்கலாம்னு இருக்கேன் இதுக்கு உங்க சம்மதம் தேவை”

  

”எல்லாரையுமா”

  

”ஆமாம் அங்க இருக்கற எல்லாருக்குமே குறுக்குவழிகள்தான் முதல்ல தெரியுது, சோம்பேறிகள் பாடம் எடுக்க கூட கஷ்டப்படறாங்க, மாசா மாசம் சம்பளம் மட்டும் வாங்க முன்வராங்களே தவிர அந்த காலேஜ் முன்னேற்றத்துக்கு உதவ மாட்டேங்கறாங்க இப்படியிருக்கறவங்களை வைச்சிக்கிட்டு அந்த காலேஜை சரியாக்க முடியாது சார்” என்றாள்

  

”சரிம்மா உன் விருப்பம் இனி நான்தான் தாளாளரா அங்க வரப்போறேன் என் பேரன் இனி அங்க வரமாட்டான்“

  

”நல்லது சார் அவரை நான் குறை கூற விரும்பலை, ஆனா அவருக்கு மாணவர்களோட ஒழுக்கத்து மேல விருப்பம் இல்லை, யார் எப்படியாவது போகட்டும் தன் வேலை ஆனா போதும்னு நினைக்கறாரு, அவர் இருந்தாலே அந்த இடத்தில நெகட்டிவ்வாதான் நடக்குது”

  

2 comments

  • தயவுசெய்து, ஹீரோ புது வாத்தியாராக வேலைக்கு வரப்போறானு கதைய மாத்திடாதீங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.