”இல்லை இனி அவனை நான் காலேஜ்க்குள்ள நுழைய விடமாட்டேன் போதுமா”
”போதும் சார் புதுசா ஆசிரியர்களை நான் நியமிக்கிறேன், பழைய ஆசிரியர்களை வேலையை விட்டு எடுக்க வேண்டியது உங்க பொறுப்பு”
”விடியட்டும் நானே காலேஜ்க்கு வந்து நீ சொன்னதை செய்றேன்”
”ரொம்ப நன்றி சார்”
”வேற ஏதாவது வேணுமா”
”வேணாம் சார்”
”உனக்கு கேட்டேன்”
”எனக்குன்னு எந்த ஆசையும் இல்லை சார் என்னை நம்பி தந்த காலேஜை சரியாக்கனும் அதுதான் என்னோட லட்சியமே”
என சொல்லும் போதே அவளின் வீடு வந்துவிட கார் நின்றது அவளும் இறங்கினாள் கூடவே அவரும் இறங்கினார்.
மாதவியோ கவலையுடன் வீட்டின் முன் நின்றிருந்தாள், கண்ணகியை கண்டதும் ஓடிவந்து அவளை கட்டியணைத்துக் கொண்டு குழந்தை போல தேம்பி தேம்பி அழுதாள் அதில் கண்ணகிக்கு சிரிப்பே வந்தது
”ஏய் என்னடி குழந்தை போல அழற”
”நான் ரொம்ப பயந்துட்டேன் கண்ணகி”
”எனக்கு ஒண்ணும் ஆகலை இங்க பாரு என்னைப் பாரு” என சொல்லி அவளை விட்டு விலகி