இப்ப என் மனசுல பழிவாங்கற எண்ணம் கூட இல்லை ஆனா கொம்பன் என்னை ஏமாத்தினது கொஞ்சம் கஷ்டமாயிருக்கு ஆனா ஒண்ணு அவன் மனசார மன்னிப்பு கேட்டது பெரிய விசயம், அதை சாக்கா வைச்சி என்னை பழிவாங்க நினைக்கறது முட்டாள்தனம், எப்படியாவது அவனை திருத்தனும் என்ன செய்யலாம்” என பலமாக யோசிக்க மெதுவாக அந்த அறைக்குள் வந்தான் கொம்பன். அவன் வரவை அந்நேரம் அவள் எதிர்பார்க்கவில்லை வந்தவனைக்கண்டு அலுத்துக் கொண்டாள்
”அடச்சீ நீதானா”
”நினைச்சேன் நீ மாறவேயில்லை ஆமா என்ன பலமா யோசிக்கற மாதிரியிருக்கு என்ன விசயம்”
”உன்னை எப்படி பழிவாங்கலாம்னு திட்டம் தீட்டிக்கிட்டு இருக்கேன்” என சொல்ல அவனோ அதிர்ந்து
”ஏய் நாள் முழுக்க உனக்கு வேற வேலையே இல்லையா என்னை பழிவாங்கறதுதான் உன் வேலையா”
”ஆமாம்”
”இதுக்கு ஒரு முடிவே இல்லையா”
”இல்லை எப்ப நீ என்னையே ஏமாத்தப் பார்த்தியோ இனி உன்னை நான் ஏன் நம்பனும் ஊருக்கு முன்னாடி ஒரு பேச்சு என் முன்னாடி ஒரு பேச்சு பேசற”
”சரி விடு ஏதோ பேசிட்டேன் மறந்துடு“
”முடியாது” என ஒவ்வொரு எழுத்தாக அழுத்தமாக உச்சரிக்க அவனுக்கு கோபம் தலைக்கேறியது
”நான்கூட உன்கிட்ட வந்து மனம் மாறி ஏத்துக்கலாம்னு பார்த்தேன் இல்லை உன்னை