(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”அப்படி சொல்லாத ஜானு, உன் நல்லதுக்கு சொல்றேன், வேங்கையன் ரொம்ப நல்லவரு அவரை நானே காதலிக்கிறேன்னா பார்த்துக்க, அவரோட நல்லகுணம் மூர்த்திகிட்ட கிடையாது சொல்லப்போனா மூர்த்தி கடைசி வரைக்கும் உன்னை ஏத்துக்க மாட்டான் அவனை நம்பி ஏமாந்துடாத”

  

”நான் ஒண்ணும் ஏமாறமாட்டேன், நீதான் என்னை ஏமாத்தப்பார்க்கற இதோட நமக்குள்ள இருந்த நட்பு முறிஞ்சிடுச்சி இனி நீ யாரோ நான் யாரோ”

  

”ஜானு”

  

”சீ ஏமாத்துக்காரி, அப்படி என் பேர் வைச்சி கூப்பிடாத போ இங்கிருந்து, இனி நீ ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது போ”

  

”போறேன்” என வருத்தமாக சொல்லியவள் பெட்டியுடன் அறை வாசலை தாண்ட மங்களம் கண்கள் கலங்க நின்றிருந்தார்

  

”மன்னிச்சிடுங்க அத்தை நான் இங்க வந்திருக்க கூடாது நான் வந்தது நடிக்கதான், ஆனா எனக்கேத் தெரியாம இந்த வீடு, இங்கிருக்கறவங்களை பிடிச்சிப் போச்சி, சின்ன மருமகள் சின்ன மருமகள்ன்னு நீங்க ஆசையா கூப்பிடறப்ப அது உண்மையாக கூடாதான்னு ஏங்கியிருக்கேன், அந்த ஏக்கத்துல உங்க பையனை காதலிச்சேன், ஆனா அவர் என்னை ஏத்துக்கலை பரவாயில்லை, நான் வந்த நோக்கம் வேற ஆனா நடந்தது வேற, எல்லாரையும் நான் ஏமாத்த நினைச்சேன், என் மேலதான் தப்பு நான் கிளம்பறேன் அத்தை, உடம்பை பத்திரமா பார்த்துக்குங்க நேரத்துக்கு சாப்பிட்டு மருந்து மாத்திரை எடுத்துக்குங்க” என சொல்லிவிட்டு மஹதி நடக்க மங்களத்திற்கு அவளை அனுப்ப மனம் வரவில்லை தவித்தார்

  

வீரசிங்கமோ மஹதியின் செயலையும் மங்களத்தின் கவலையையும் கவனித்தபடி இருந்தார், வேங்கையனோ வெறுப்புடன் இருந்தான், ஜானகிக்கு பொல்லாத கோபம் வந்தது, மூர்த்தி மட்டும் மஹதி செல்வதை நினைத்து மகிழ்ந்தான், இதுதான் சாக்கு என தன் பெற்றோரிடம் பேசினான்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.