”அப்பா அம்மா மஹதியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எனக்கு பார்த்த வரன்தானே அவள் பேசாம அவளை எனக்கு கட்டிவைச்சிடுங்கம்மா ப்ளீஸ்பா” என சொல்ல அவர்களோ
”இருடா முதல்ல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் அவளே வேங்கையனை காதலிக்கறதா சொல்றாளே”
”அது சும்மாமா கேட்டல்ல ஜானகிக்காக இங்க நடிக்க வந்திருக்கா நடிப்பு பலிக்கலை அதான் கிளம்பறா“
”ஆனா அவள் வேங்கையனை விரும்பறாளே”
”அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் பார்த்துக்கறேன், அவளே இங்கிருந்து கிளம்பறப்ப நமக்கு இங்க என்ன வேலைகிடக்கு, நாமளும் அவளோட கிளம்பி திருச்சிக்கு போய் பொண்ணு கேட்கலாம்மா“
”இதுக்கு அவங்க சம்மதிப்பாங்களா“
”கண்டிப்பா சம்மதிப்பாங்க மஹதி, இங்க என்னென்ன செய்தாள்ன்னு அவங்ககிட்ட சொன்னா போதும் அவங்களே அவமானத்துக்கு பயந்து பொண்ணை தரேன்னு சொல்வாங்க, இந்த விசயத்தை உடனே செய்தாகனும் ஆரபோட்டா காரியம் கெடும்”
அதற்கு செல்வமோ
”நீ சொல்றதும் சரிதான் வேங்கையன் ரொம்ப பிடிவாதமா இருக்கான், ஜானகியை அவன் கைவிடப்போறதில்லை, அவளை நீ ஏத்துக்கவும் போறதில்லை, வந்த வேலை முடிஞ்சிடுச்சி நாம கிளம்பலாம்”
பரிமளாவோ
”எது எப்படியோ அந்த ஜானகி எனக்கு மருமகளா வரப்போறதில்லை ரொம்ப சந்தோஷம்,