”வேணாம்”
”ரொம்ப தெளிவா இருக்கியா இல்லை கொஞ்ச நாள் கழிச்சி மூர்த்தி கிடைக்கலைன்னதும் மனசு மாறமாட்டியே”
“நிச்சயமா இல்லை நான் மூர்த்தி மாமாகூடதான் வாழப்போறேன்” என சொல்ல மூர்த்தி அதிர்ந்து வீரசிங்கம் முன் வந்து நின்றான்
”என்னால ஜானகியை ஏத்துக்க முடியாது எனக்கு அவள் வேணாம்” என சொல்ல ஜானகியோ மூர்த்தியிடம்
”மூர்த்தி மாமா பயப்படாதீங்க யாரும் உங்களை எதுவும் செய்திட மாட்டாங்க, தைரியமா இருங்க நான் இருக்கேன் உங்களுக்கு துணையா” என சொல்ல மூர்த்தியோ கடுப்பாகி
”சீய் நிறுத்து உன்னால என் மானமே போகுது நீ எனக்கு வேணாம்”
”மாமா ஏன் இப்படி பேசறீங்க நான் உங்க ஜானகி”
”ப்ச் சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா, உன்னை நான் முறைபொண்ணா பார்த்தேனே தவிர ஒரு நாளும் என் பொண்டாட்டியா உன்னை நினைச்சிப் பார்க்கலை போதுமா, என்னிக்கு உனக்கும் வேங்கையனுக்கும் கல்யாணம் ஆச்சோ அப்பவே நான் உன்னை மறந்துட்டேன்”
”அப்படி சொல்லாதீங்க மாமா என்னை ஏத்துக்குங்க” என அழுதாள் ஜானகி
அவளிடம் கடுமையான வார்த்தைகளை தாராளமாக விட்டான் மூர்த்தி, எப்படியாவது அவளே தன்னை விட்டு போக வேண்டும் என நினைத்தான், அவன் பேசின பேச்சைக் கேட்டு ஜானகியின் பெற்றோர் கூட மனம் கலங்கி கண்ணீர் வடித்தார்கள், ஆனால் ஜானகியோ மூர்த்தியிடம் கெஞ்சியபடியே இருந்தாள், இறுதியில் அவனது காலில் விழுந்தேவிட்டாள்