(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”தாலி கட்டினவன்தான் இந்த தாலியை கழட்டனும் நீ இதை செய்யாத பாவம்” என சொல்லியவர் வேங்கையனை பார்க்க அவனோ இரண்டடி பின்னால் எடுத்து வைத்து முடியாது என்பது போல் தலையாட்ட ஜானகி அவனிடம் சென்று கெஞ்சினாள்

  

”மாமா எனக்கு வாழ்க்கை பிச்சை போடு மாமா, நீ கட்டின தாலியை நீயே கழட்டிடு மாமா” என்றாள்

  

அவள் மாமா என்றதும் வேங்கையன் சிறிது மகிழ்ந்தான் ஆனால் அடுத்து அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான்

  

”கழட்டு மாமா” என அதட்ட அவனோ

  

”என்னால முடியாது நான் எப்படி மாட்டேன்” என அவன் திணற

  

”தாலி கழட்டறதால உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது மாமா, எப்படியிருந்தாலும் 6 மாசம் கழிச்சி  டைவர்ஸ் ஆனதும் நானே இந்த தாலியை கழட்டிடுவேன், அப்புறம் என்ன மாமா இப்பவே கழட்டு மாமா”

  

”என்னால இதை செய்ய முடியாது ஜானகி“

  

”செய்துதான் ஆகனும், நான் சந்தோஷமா இருக்கனுமா இல்லை தூக்குப் போட்டு தொங்கனுமா வாழ்வா சாவா ரெண்டும் உங்க கையிலதான் இருக்கு, இந்த தாலியை கழட்டுங்க மாமா” என அவள் தாலியை அவன் புறம் காட்டி மிரட்டினாள்.

  

வேங்கையனுக்கு உயிரே போய் விடும்போலானது. நிற்க முடியாமல் தடுமாறி தரையில் அமர்ந்துவிட ஜானகி அப்போதும் அவனை விடவில்லை

  

”கழட்டப்போறியா இல்லையா கழட்டு கழட்டு தாலியை கழட்டு” என அவனிடம் கத்த கத்த வேங்கையன் கண்கள் கலங்கி கண்ணீருடன் கைகூப்பி அவளைப் பார்த்து பார்வையில்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.