(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

கெஞ்சினான் ஆனால் அவள் மசியவில்லை

  

”ஓ நீ கழட்டமாட்டல்ல அப்ப சரி நான் செத்துப் போறேன்” என சொல்ல துடித்துப் போன வேங்கையனோ

  

”வேணாம் வேணாம்” என சொல்ல

  

”அப்ப கழட்டு” என்றாள் அதிகாரமாக அதில் அவனும் அழுத கண்களுடன் நடுங்கிய கைகளுடன் தாலியை நெருங்க முடியாமல் தடுமாற அவளே அவனது கைகளில் தாலியை திணித்தாள்.

  

அவனுக்கோ காய்ச்சல் எடுத்தது கைகள் நடுங்கியது, அவன் கட்டாயம் கழட்டப்போவதில்லை என அங்கிருந்தவர்கள் அனைவரும் அறிந்ததே, ஜானகிக்கும் இது தெரியும், வேங்கையனும் கழட்ட மனமில்லாமல் தவித்தான்

  

ஆனால் ஜானகியோ இது வேலைக்கு ஆகாது என நினைத்து சட்டென விலகினாள், அதில் அந்த தாலிகயிறு அறுந்து வேங்கையின் கையில் அவன் கட்டிய தாலி ஊஞ்சலாட அதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்தேப் போனான் வேங்கையன்.

  

ஜானகியின் செயல் அவளது பெற்றோரையும் கலங்க வைத்தது, ஆனாலும் என்ன செய்வது மகளின் பிடிவாதத்திற்கு முன்னால் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாமல் கோபத்தில் அவளைப் பார்த்து

  

”இனி நீ எங்களுக்கு பொண்ணே இல்லை, நல்ல வாழ்க்கையை அழிச்சிக்கிட்டியேடி பாவி, மூர்த்தி மூர்த்தின்னு இருந்தள்ல போ, அவன்கிட்டயே போ, இனி நீ செத்தாகூட எங்க வீட்டுக்கு வரக்கூடாது” என வேணி தீர்த்துச் சொல்லிவிட்டு தன் கணவரைப் பார்க்க அவரோ கண்கள் கலங்க

  

”நீங்க எதுக்கு அழறீங்க, அவள் இப்ப செய்ததுக்கு ஒரு நாள் கட்டாயம் கஷ்டப்படுவா, நீங்க வாங்க போகலாம் நமக்கு பிள்ளை இல்லைன்னு மனசை தேத்திக்கலாம்” என சொல்ல அவரோ ஏதும் பேசாமல் அமைதியாக தன் மனைவியுடன் வீட்டை விட்டு சென்றுவிட

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.