“பெயர் பொருத்தத்தை வைச்சி ஏமாந்துடாதீங்க சார், என் பேர் கண்ணகிங்கறதால மட்டுமே உங்க பேரனை என்னால கல்யாணம் செய்துக்க முடியாது”
”அவன்கிட்ட என்ன குறை இருக்கு”
”எதுவும் இல்லை ஆனா எனக்கும் அவருக்கும் ஒத்துப்போகாது”
“இந்த கதையெல்லாம் எனக்கு வேணாம் கண்ணகி, உனக்குன்னு யாருமில்லை என் காலத்துக்கு அப்புறம் கோவலனுக்கும் யாரும் இல்லை, நீயும் அவனும் ஒண்ணு சேர்ந்தா உங்க வாழ்க்கை நல்லாயிருக்கும், உங்களுக்கு அன்பு பாசம் காட்ட யாருமில்லை அதனால ஒருத்தரை ஒருத்தர் பாசம் கொடுத்து அன்போட வாழ்வீங்க” என ஈஸ்வரமூர்த்தி சொல்ல கண்ணகிக்கு சிரிப்பே வந்தது
”என்னம்மா சிரிக்கற”
”நீங்க சொன்னதைக் கேட்டா அப்படித்தான் சிரிப்பு வருது சார் என்னை மன்னிச்சிடுங்க”
”என் பேரன் சம்மதம் சொல்லிட்டா நீ அவனை கல்யாணம் செய்துப்பியா”
”கண்டிப்பா அவர் சம்மதிக்க மாட்டாரு”
”அவனே உன்கிட்ட வந்து என்னை கல்யாணம் செய்துக்கறியான்னு கேட்டா என்ன செய்வ”
”என்ன செய்யனும் சார்”
”அவனை நீ கல்யாணம் செய்துக்கனும்”
”சார்ர்ர் அது வந்து”