“ஒத்துக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு, என்ன சொன்னா அவள் வழிக்கு வருவாள்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்”
”ஏன் தாத்தா இப்படி எல்லார் வாழ்க்கையிலயும் விளையாடறீங்க, என்னை ப்ளாக்மெயில் செஞ்ச மாதிரி அவளையும் செய்ய போறீங்களா, இப்படியெல்லாம் செய்து எனக்கும் அவளுக்கும் கல்யாணம் செய்து வைச்சிட்டா உங்களோட கடமை முடிஞ்சிடும், அதுக்கு அப்புறம் வாழ வேண்டியது நாங்கதானே, நாங்க சந்தோஷமா வாழலைன்னா அப்ப எங்க வாழ்க்கை இப்படியாயிடுச்சேன்னு வருத்தப்படப்போறது நீங்களாதான் இருப்பீங்க தாத்தா”
”எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும் அவளைப் பத்தியும் தெரியும் கண்டிப்பா நான் வருத்தப்படற மாதிரி நடக்காது” என தெளிவாகச் சொல்ல அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது, அவரவர்கள் தங்கள் அறைக்குச் சென்றார்கள்.
கோவலனுக்கு இருப்பு கொள்ளவில்லை, நடப்பது அவனுக்கு பயத்தை தந்தது ஒருவேளை தாத்தா சொன்னது போல் நடந்து கண்ணகியை தான் மணக்க நேர்ந்தால் அய்யோ என கதறினான், மனதில் மாதவியை வைத்துக் கொண்டு கண்ணகியுடன் வாழ்வதா என்று நினைத்து கலங்கினான். அதற்காக நாணயத்தை சுண்டிப்பார்த்தான். அதில் மாணவர்கள் பாஸானால் பூ விழுவது அரியர் வைத்தால் தலை விழுவது என நினைத்து சுண்ட அதுவோ பூவில் வந்து விழுந்தது அதைக்கண்டதும் அதிர்ச்சியில் நிலைகுலைந்துப் போனான் கோவலன்
10 நாள் விடுமுறையை மாதவி நன்றாக பயன்படுத்திக் கொண்டாள் ஜாலியாக இருந்தாள் ஆனால் கண்ணகி கல்லூரி வேலைகளில் மூழ்கினாள். 10 நாள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. முடிவில் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்கு வந்தார்கள், ஆசிரியர்களும் வந்தார்கள். அவர்களை ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்தாள் கண்ணகி. அனைவரும் வந்ததும்
”நான் சொல்றதைச் சொல்லுங்க” என ஆரம்பிக்க மாணவர்களிடம் வெறுப்பு இல்லை மாறாக புன்முறுவல் வந்தது, அவர்கள் தயாரானார்கள் அவள் சொல்ல சொல்ல மாணவர்களும் திருப்பிச் சொன்னார்கள்