(Reading time: 23 - 46 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”போன செமஸ்டர்க்குதான் நேரம் போதலை, இருக்கற நேரத்தில கஷ்டப்பட்டு பாடம் எடுத்தீங்க ஆனா இப்ப அந்த கவலையில்லை, செமஸ்டர் எக்ஸாம் வர்றதுக்கு இன்னும் நாலஞ்சு மாசம் இருக்கு, அதனால பொறுமையா பாடம் எடுங்க” என சொல்ல அவர்கள் சிரித்தபடியே சரியென தலையாட்டினார்கள்.

  

மாணவர்களைப் பார்த்து

  

”இன்னியில இருந்து உங்களுக்கு அடுத்த செமஸ்டருக்கான பாடம் எடுப்பாங்க போன முறை போல நெருக்கடியான நிலைமை இல்லை இந்த முறை நீங்க நிதானாமா படிக்கலாம் சரியா” என சொல்ல அதில் அவள் தனியாக பாடம் எடுத்த 80 மாணவர்களில் இருந்து ஒருவன் கேள்விக் கேட்டான்

  

”அப்ப எங்களுக்கு யார் பாடம் எடுப்பா நீங்கதானே” என கேட்க அவளோ

  

”ஓ நீங்களா அதுக்கு அவசியம் இல்லை, நீங்க எந்தெந்த வகுப்புல இருந்து வந்தீங்களோ அதே வகுப்புக்குப் போகலாம்” என சொல்ல அவர்களும் சரியென்றார்கள்

  

கண்ணகியும் புதிய கட்டுப்பாடுகளை பற்றி அவர்களிடம் விளக்கம் அளித்தாள் அதைக்கேட்டு யாரும் பதறவில்லை ஒப்புக் கொண்டு அவரவர்கள் தங்கள் வகுப்புச் சென்றார்கள்.

  

கண்ணகியோ தாளாளர் அறைக்கு வந்தாள் அங்கு ஈஸ்வரமூர்த்தி இருந்தார்

  

”வாம்மா எல்லா மாணவர்களும் வந்தாங்களா”

  

”ஆமாம் சார் எல்லார்கிட்டயும் பேசிட்டு வந்துட்டேன் முன்ன மாதிரியில்லை இப்ப எல்லா மாணவர்களும் தெளிவா இருக்காங்க அதனால கவலைபட வேணாம்”

  

”நீயிருக்கறப்ப எனக்கு என்னம்மா கவலை”

  

2 comments

  • மிக்க நன்றி, எங்க கோவலன் பேராசியரா வந்து ரொமான்ஸ் பண்ற மாதிரி கதை போயிடுமோனு பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் ஆகல, அதுக்கே மிக்க நன்றி

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.