”அடப்பாவி கொம்பா எப்படி உனக்கு மனசு வந்தது, எப்படி உன்னால இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்துக்க முடிஞ்சது, என்னை பத்தி நினைச்சிப் பார்க்கலையா நீ எப்படிடா” என மனதுக்குள் திட்டுவதாக எண்ணி வெளிப்படையாக திட்ட கொம்பனோ
”என்னை ஏத்துக்க மட்டும் உன்னால முடியாது, ஆனா இன்னொருத்தனை புருஷனா ஏத்துக்கிட்டல்ல நான் உன்னை கட்டிப்பிடிச்சேன், முத்தம் கொடுத்தேன் அதெல்லாம் கூட மறந்துட்டியா நீ என்னை பழிவாங்கினதை கூட மறந்துட்டியா, உண்மையான நரகமே இதுதான்டி”
”இப்ப நான்கூட நரகத்திலதானே இருக்கேன்” என்றாள் அழுதபடியே அதைக்கேட்ட கொம்பனோ
”போதும் எப்ப நீயே என்னை விட்டு போயிட்டியோ இனி நான் ஏன் இந்த கல்யாணத்தை செய்துக்கனும் நான் சந்நியாசியாகப் போறேன்” என சொல்ல அவளோ
”எனக்கும் இந்த கல்யாணம் வேணாம், கொம்பனோட வாழ முடியலை அவன் வாழறதையாவது பார்த்து நாம வாழ்ந்துக்கலாம்” என சொல்ல இவ்விருவருமே ஒன்று போல கத்தினார்கள்
”எனக்கு இந்த கல்யாணம் வேணாம்“ என சத்தமாக அதைக்கேட்டு அனைவருமே கலகலவென சிரிக்க அவர்களுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது, என்னவென பக்கத்தில் பார்த்தார்கள் இருவருமே ஒரே மணமேடையில் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்
”நீ என்ன இங்க“ என கொம்பன் கேட்க அவளோ
”அதை நான் கேட்கனும் உனக்குதான் கல்யாணம் ஆயிடுச்சில்ல பின்ன எதுக்காக என் பக்கத்துல வந்து உட்கார்ந்த“
“யாருக்கு கல்யாணம் ஆச்சி எனக்கா நான் அப்ப இருந்து இங்கதான் உட்கார்ந்திருக்கேன்“