அதற்குள் கோயில் வந்துவிட இரு பிரிவினரும் பிரிந்து சென்றார்கள், கோயிலில் ஒரு பக்கத்தில் மேடையும் இன்னொரு பக்கத்தில் இன்னொரு மேடையும் இருந்தது, ஒரு பக்கம் கொம்பன் தனது சொந்த பந்தங்களுடன் நின்றுவிட்டான், இன்னொரு பக்கம் காவேரி தன் தந்தை சொந்த பந்தங்களுடன் சென்றுவிட்டாள்.
கொம்பனை மேடையில் அமரவைத்தாரகள் அவனோ இயந்திரத்தனமாக இருந்தான் மனம் ஒப்பவில்லை, ஊர்க்காரர்கள் யாராவது வந்து தனது திருமணத்தை நிறுத்த மாட்டார்களா என ஏங்கித்தவித்தான், ஆனால் ஊர்க்காரர்களோ மகிழ்ச்சியாக இருக்கவே அவனுக்கு கொடுமையாக இருந்தது இதே நிலைமையில்தான் காவேரியும் இருந்தாள்
”அடப்பாவிகளா 7 கல்யாணத்தை நிப்பாட்ட கூப்பிடாமலே புறப்பட்டு வந்தீங்களே இந்த கல்யாணத்தை நிப்பாட்ட எவனுமே வரலையே சே” என நொந்துப் போனாள்.
ஐயர் மந்திரம் சொல்ல ஆரம்பிக்கவும் கொம்பனுக்கும் காவேரிக்கும் பயம் வந்தது, காவேரியும் மணமேடையில் அமர்ந்தாள். அவள் பக்கம் அவளுக்கென பார்த்து வைத்த மணமகன் வந்து அமரவும் அவனை ஏறிட்டுப் பார்த்து நொந்துப் போனாள். இன்னொரு பக்கம் கொம்பனும் தனக்கு பக்கத்தில் காவேரியில்லாமல் வேறு பெண் இருக்கவும் வெறுப்புற்றான்.
இருவருக்கும் புது துணி தரப்பட்டது அதை உடுத்திக் கொண்டு வர சென்றார்கள். இருவரும் உடை அணிந்ததும் சோர்வாகவே இருந்தார்கள் இருவருக்கும் ஒரே எண்ணம் இந்த கல்யாணத்தை நிப்பாட்ட வேண்டும் என்று, ஆனால் அதற்கு காரணம் கேட்டால் என்ன சொல்வது என தெரியாமல் திகைத்தபடியே இருக்க, அவர்களை கைபிடித்து அழைத்துச் சென்று மணமேடையில் அமரவைத்தார்கள்.
கொம்பனும் எங்கும் பாராமல் நேராக பார்த்தபடி இருக்க காவேரியும் அக்கம் பக்கம் பார்க்கவில்லை தலை குனிந்தபடியே இருந்தாள், ஐயரும் மந்திரங்கள் சொல்ல ஆரம்பிக்க சில நிமிடங்களில் இன்னொரு பக்கம் இருந்து கெட்டிமேளம் சத்தம் கேட்கவும் இவ்விருவருமே கண்கள் கலங்கினார்கள்