”பயப்படாதம்மா நான் எல்லாத்தையும் பேசிட்டு சரியாக்கிட்டு வந்துடறேன், நீ கவலைப்படாத“
”அய்யோ மாமா நான் என் வீட்டை பத்தி சொல்லலை வேங்கையனை நினைச்சி பயமாயிருக்குன்னு சொன்னேன்“
”ஓஹோ அவன் இன்னுமா வீட்டுக்கு வரலை“
”ஆமாம் மாமா அதான் கவலையா இருக்கு”
”நான் போய் அவனை தேடி பிடிச்சி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன், நான் ஊர் வர்றவரைக்கும் அவன் முன்னாடி போய் நின்னுடாத, தேவையில்லாம யார் மேலயோ இருக்கற கோபத்தை உன் மேல கொட்டுவான், அதைப் பார்த்து நீ வருத்தப்படுவ, எதுவாயிருந்தாலும் நான் வர்றவரைக்கும் அமைதியா இரும்மா”
”சரிங்க மாமா அப்படியே செய்றேன்” என சொல்ல அவரோ தன் மனைவியிடம்
”மங்களம் உன்னை நம்பித்தான் சின்ன மருமகளை விட்டுட்டு போறேன், உன் பையன் புலியாட்டம் வந்து அவளை விரட்டிடப்போறான், கவனமா இரு”
”நீங்க கவலைப்படாம போய் வாங்க, என்னை மீறி அவனால எதுவும் செய்ய முடியாது நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல அவரும் சந்தோஷமாக கிளம்பி ஊர் முழுக்க தேடி அலைந்து ஊர்கோடியில் இருந்த சுமைதாங்கி கல்லில் படுத்திருந்த மகனைக்கண்டு நொந்துப் போனார்
”பாரு இவன் எங்ககிடக்கறான்னு, என்னத்த இங்க நடந்துப் போச்சாமா, பெரிசா பொஞ்சாதியை இழந்த துக்கத்தில ஓவரா ஆட்டம் போடறானே, இருடா வரேன்” என சொல்லிக் கொண்டே அவனிடம் சென்றவர் கையால் பட்டென அவனின் தோளில் ஒரு அடி போட அதில் அவன் அரண்டு போய் எழுந்து தந்தையை பார்த்து மிரண்டான்
”இங்க என்னடா செய்ற”