(Reading time: 23 - 45 minutes)
Chinna marumagal
Chinna marumagal

அவளோட அப்பா அம்மாகிட்ட பேசறேன்”

  

”என்னடா சொல்ற, மஹதிக்கே உன் மேல விருப்பம் இல்லாதப்ப நீ பாட்டுக்கு அவள் வீட்ல போய் பேசறதா சொல்ற”

  

”மஹதி வேங்கையன் வீட்ல இருக்கற விசயம் அவங்களுக்கு தெரிய வாய்ப்பிருக்காது, அவங்க ஜானகி வீட்லதான் தன் பொண்ணு இருக்கறதா நினைப்பாங்க, அது பொய்யுன்னு சொல்லி இங்க நடக்கறதை அவங்ககிட்ட சொல்லி பொண்ணு கேட்பேன், தன் பொண்ணு செய்த தப்பை நினைச்சி அவங்க வருந்தி நான் சொன்னதை கேட்டு நடப்பாங்கப்பா, எனக்கு நம்பிக்கையிருக்கு நான் நாளைக்கே திருச்சிக்குப் போறேன்”

  

”அவசரப்படாத மூர்த்தி உன்னால எப்படி ஜானகியை தாண்டி போக முடியும்”

  

”அவளுக்குத் தெரிஞ்சாதானே நான் வேலைக்கு போறதா சொல்லிட்டு ஊருக்குப் போறேன் அவளுக்கு என்ன தெரியவா போகுது”

  

”அவளை நீ குறைச்சி எடைப்போடாத, பார்த்தல்ல உனக்காக தாலியை கூட அறுத்துட்டு வந்திருக்கா, நீ கிடைக்கலைன்னா என்னவெல்லாம் செய்வா பாரு, அவளை பார்க்கறப்ப எங்களுக்கு பயமாயிருக்கு, எங்க எங்களை கொன்னுடுவாளோன்னு அச்சமா இருக்கு” என்றார் பரிமளா அதற்கு மூர்த்தியோ

  

”அப்படி ஏதும் நடக்காதும்மா நீ வேற பயந்துக்கிட்டு“

  

”என்னவோ செய் சீக்கிரமா அவளை வெளிய அனுப்பற வழியைப் பாரு, இல்லைன்னா நீ அவள்கூட வாழ்ந்துட்டன்னு கூட வதந்தி கிளப்பி ஊரையே நம்ப வைச்சிடுவா, அப்புறம் பஞ்சாயத்து வைச்சாங்கன்னு வையேன் அவள் பக்கம்தான் தீர்ப்பாகும், விதியேன்னு நீ அவளை கல்யாணம் செய்துக்கற நிலைமை வரும்”

  

“அப்படி ஒரு விசயம் நடந்துடக்கூடாதுன்னுதான் நான் மஹதியை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.