(Reading time: 23 - 45 minutes)
Chinna marumagal
Chinna marumagal

“ஏன்டா வேற பொண்ணே கிடைக்கலையா உனக்கு”

  

”அவளை கல்யாணம் செய்துக்கிட்டா திருச்சிக்குப் போயிடுவேன், சொத்துள்ள பொண்ணு எதுக்கு விடனும், அதுலயும் ஜானகியோட தோழி வேற, அவளை நான் கல்யாணம் செய்துக்கிட்டா அடுத்து வர்ற பிரச்சனைகளை அவளே சமாளிப்பா, நான் ஃப்ரீயா இருப்பேன்”

  

”என்னவோ போ நீ பாட்டுக்கு ஊருக்கு போயிடுவ இவளை எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலையே”

  

”முடிஞ்சா பாருங்க இல்லைன்னா அவளை வெளிய தள்ளிட்டு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிடுங்க”

  

”அப்படிங்கற சரி சரி நீயிருந்தா ரொம்ப ஆடுவா, நீ முதல்ல ஊருக்கு கிளம்பு, நீ அப்படி போனதும் நாங்களும் அவளை வெளிய விரட்டிட்டு சிவகங்கையில என் அண்ணன் வீட்ல போய் தங்கிட்டு வரோம், பிரச்சனை முடிஞ்ச பின்னாடி சொல்லு ஊருக்கு வரோம்“

  

”அப்படியா அப்ப நானும் மஹதி வீட்ல பேசிட்டு நேரா சிவகங்கைக்கு வந்துடறேன், வீட்டுக்கு வந்தா ஜானகி விடமாட்டா பிடிச்சிக்குவா”

  

“சரி சரி மஹதி வீட்ல பேசறப்ப ஜாக்கிரதையா பேசு, இந்நேரம் அவள் அப்பா அம்மாகிட்ட நடந்ததை சொல்லியிருந்தா என்னாயிருக்கும்“

  

“வாய்ப்பில்லைப்பா அவள் சொல்லமாட்டா, சொன்னா அவளுக்கு திட்டு கிடைக்கும், அவள் என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டாப்பா பாருங்க, அவளை வைச்சே நான் என் புது ஆட்டத்தை ஆடறேன்” என சொல்லி வில்லத்தனமாகச் சிரிக்க கூடவே அவனின் பெற்றோர்களும் சிரித்தார்கள்.

  

மறுநாள் காலையில் வீரசிங்கம் திருச்சிக்கு செல்ல கிளம்பினார்.

  

”மாமா எனக்கு பயமாயிருக்கு மாமா” என்றாள் மஹதி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.